திருப்பூர், பிப்.21 ஊழல் எதிர்ப்பு இயக்க நிர் வாகி கோரிக்கை மனு மீது தொடர்ந்து எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படாததை அடுத்து திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். ஆட்சியரின் உறுதி மொழியை அடுத்து அவரது போ ராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருப்பூர் விஜயாபுரம் பகு தியைச் சேர்ந்தவர் பொன்னுலிங் கம்(89). இவர் ஊழல் எதிர்ப்பு இயக்க புரவலராக உள்ளார். கொமுக பொது தொழிலாளர் சங்க செயலரான ராஜாமணியு டன் திங்கள்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு வந்த அவர் திடீரென சத்தி யாகிரக போராட்டத்தில் ஈடுபட் டார். திருப்பூர் நல்லூர் பகுதியில் தனக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலம் கடந்த முறை பெய்த மழை யால் 3 அடி உயரத்துக்கு நீர் தேங்கி பாதிக்கப்பட்டதுடன், அந்நிலத்தில் பயிரிட்டிருந்த மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்கள் நாச மானதாக தெரிகிறது. பாதிக்கப் பட்ட பகுதியை ஆய்வு செய்து சேத மதிப்பீடு நிதி வழங்கக் கோரி கடந்த டிசம்பர் 1ம் தேதி அவர் ஆட்சியர் எம்.மதிவாணனிடம் மனு அளித்திருந்த போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அம்மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்டு அனுப்பிய கடிதத்துக்கும் எவ்வித பதிலும் கிடைக்காததை அடுத்து ஆட்சியரகத்தில் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட வுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் ஆட்சியர் மதிவாணனிடம் அளித்த மனு வில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடந்த ஆட்சியர்கள் மாநாட்டில் மக்க ளின் கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுக்க முடியாமல் போனால் அதற்கான காரணத்தை மனு அளித்த நபருக்கு கடிதம் மூலம் ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார். ஆனால், என் கோரிக்கை மீது இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை, அதற்கான காரணமும் தெரிவிக்க வில்லை. ஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரி வித்து காந்திய வழியில் ஆட்சியர கம் முன்பு தனிநபர் சத்தியாகிர கத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டி ருந்தது. மனு பெற்றுக்கொண்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீதும் ஒரு மாதத் துக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உறுதி மொழியை ஏற்று பொன்னு லிங்கம் சத்தியாகிரக போராட் டத்தை கைவிட்டார்.

Leave A Reply