ஊட்டி, பிப்.21- ஊட்டி அடுத்த லவ்டேல் கிராண் டப் சாலை பகுதியில் நீலகிரி தெற்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. திங்களன்று (பிப். 20) இரவு இப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த முட்புதர்கள், செடி, கொடி கள், புற்கள் எரிந்து நாசமாயின. உடன டியாக அப்பகுதி மக்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் அருகில் உள்ள வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. நீலகிரி வடக்கு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியி லும் காட்டூத் தீ ஏற்பட்டது.

Leave A Reply