கொல்லம், பிப். 21 – இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற என்ரிகா லெக்சி என்ற இத்தாலி எண் ணெய்க் கப்பலின் பாது காப்பு வீரர்கள் இருவரும் நீதிமன்றக் காவலில் வைக் கப்பட்டனர். கேரள கடல் பகுதியில் பிப்ரவரி 15ம்தேதியன்று இந்திய மீனவர்கள் அஜேஷ் பின்கி மற்றும் ஜெலஸ்டின் ஆகியோரை இத்தாலி கப் பல் என்ரிகா லெக்சியின் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். சோமாலியா கடற் கொள்ளையர்கள் என கருதி அவர்களை சுட்டுக் கொன் றதாக பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்த போதும், இந்திய அரசு, பாதுகாப்பு வீரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. அவர்களை மார்ச் 5ம் தேதி வரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு கருணக பள்ளி நீதி யியல் முதல் வகுப்பு மாஜிஸ் திரேட் கே.பி.ஜாய் உத்தர விட்டார். இத்தாலி வீரர்களை விசாரணை செய்வதற்கு 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்க வேண் டும் என விசாரணையாளர் கே.அனில் குமார் வேண்டு கோள் விடுத்திருந்தார். பிரதிவாதி தரப்பில் வாதிடுகையில், கேரள கடற் கரைக்கு 33 மைல் தொலை வில் துப்பாக்கிச்சூடு நடந் தது எனக் கூறப்பட்டது. ஆனால் சம்பவம் 22.5 கடல் மைல் தொலைவில் நடந் தது. 24 கடல் மைல் எல்லை வரை இந்திய நீர் எல்லைக் கட்டுப்பாடு என வாதி தரப்பில் வலியுறுத்தப்பட் டது. விசாரணையாளர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வீரர் களுக்கு ரிமாண்ட் உத்தர வைப் பிறப்பித்தார். அத னை ஏற்ற நீதிபதி பிப்ரவரி 23ம்தேதி வரை இத்தாலி கப் பல் வீரர்களை போலீஸ் காவ லில் வைக்க அனுமதித்தார். மகாசிவராத்திரி விடு முறை என்பதால், மாஜிஸ் திரேட் வீட்டிற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டனர். மாவட்ட காவல்துறைத் தலைவர் சாம் கிறிஸ்டி டேனியல் தலை மையில் அவர்கள் கொண்டு வரப்பட்டனர். வீரர்கள் சார்பில், வழக்கறிஞர் ராமன் பிள்ளை ஆஜரா னார். இத்தாலி கப்பல் வீரர் கள் வந்தபோது, மாஜிஸ் திரேட் வீடுமுன்பு பதற்றம் ஏற்பட்டது. அங்கு டிஒய் எப்ஐ அகில இந்திய இளை ஞர் கூட்டமைப்பு, இளை ஞர் காங்கிரஸ், பாரதிய ஜனதா யுவமோர்ச்சா அமைப்பினர் நீதிபதி வீட் டிற்குள் நுழைய முயன்றனர். இத்தாலி அரசு இந்தி யாவிற்கு சில சட்ட நிபு ணர்களை அனுப்பியுள் ளது. அவர்கள் இந்திய சட் டத்தினை ஆராய்ந்து அதி லுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பிடிபட்டுள்ள இத்தாலிய கடல்வீரர்களை விடுதலை செய்ய முயல்வர்.

Leave A Reply

%d bloggers like this: