உடுமலை, பிப்.21- உடுமலையில் பள்ளி மாணவர்களின் சாவிற்கு காரணமான ஆர்.கே.ஆர். பள்ளி மீது நீதி விசா ரணை கோரி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்களி டம் காவல்துறையினர் அராஜகமாக நடந்து கொண்டதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. உடுமலையில் உள்ள ஆர்.கே.ஆர். பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவர்கள் மர ணமடைந்துள்ளனர். எனவே, பள்ளியின் தாளாளர் ராமசாமியை உடனடி யாக கைது செய்திட வேண்டும். மாணவர்களின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகம் குறித்து நீதி விசாரனை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செவ் வாயன்று புதிய பேருந்து நிலையம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் மற் றும் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. மேலும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பே காவல்துறையின ரிடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்து, அனுமதி அளிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் திட்ட மிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். கனகராஜ், வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் வடிவேலு, என்.கிருஷ்ண சாமி மற்றும் சங்கத்தின் ஊழியர்கள் , பொதுமக் கள் உள்ளிட்ட திரளா னோர் பேருந்து நிலையம் முன்பு திரண்டனர். இந்த தொடர் முழக்க ஆர்ப் பாட்டம் வாலிபர் சங்கத் தின் உடுமலை தாலுகா தலைவர் அன்பழகன் தலைமையில் துவங்கிய போது. காவல்துறையினர் திடீரென ஆர்ப்பாட்டத் திற்கு அனுமதி மறுப்ப தாக தெரிவித்து கலைந்து செல்ல கட்டாயப்படுத் தினர். இதற்கு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டோர் கடும் எதிர்ப்பை தெரிவிக் கவே, காவல்துறையினர் பலவந்தமாக போராட் டத்தை கலைக்கும் வகை யில் தள்ளு, முள்ளு நடவ டிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. காவல்துறையின ரின் இத்தகைய அராஜக நடவடிக்கைக்கு அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்க ளும், பல்வேறு பொது நல அமைப்புகளைச் சேர்ந் தவர்களும் கடும் எதிர்ப் பினை தெரிவிக்கவே வேறு வழியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். பின்னர், இந்த ஆர்ப் பாட்டத்தில் ஒலி பெருக்கி வைக்க அனுமதியளிக்க மாட்டோம் என காவல் துறையினர் கெடுபிடி நட வடிக்கையில் ஈடுபட்ட னர். இதனால், ஒலி பெருக்கி இன்றி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர் கள் ஆவேச முழக்கமிட்ட னர். இதில் மாணவர்களின் சாவிற்கு காரணமாக பள்ளி மீது நீதி விசா ரணை நடத்த வேண்டும். இப்பள்ளிக்கு சாதகமாக தொடர்ந்து இடையூறு செய்து, போராட்டங் களை முடக்கிவரும் காவல்துறையினரின் நடவ டிக்கைக்கு கடும் கண்ட னம் தெரிவித்தும் முழக்கங் கள் எழுப்பப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: