புதுதில்லி: மகள் ஆருஷி மற்றும் வீட்டு பணியாளர் கொலைத் தொடர் பான வழக்கு விசாரணையை காஜியாபாத் தில் இருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் நுபர்-ராஜேஷ் தல்வார் விடுத்த வேண்டுகோளுக்கு சிபிஐ எதிர்ப் புத் தெரிவித்தது. சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன்பாக தாக்கல் செய்த அறிக் கை யில், விசாரணையை இடம் மாற்றுவது தொடர்பான மனுவில் சில மறைக்கப் பட்ட திட்டங்கள் உள்ளன என குறிப் பிட்டு இருந்தார். அவரது வாதத்தை கேட்ட பெஞ்ச், சிபிஐ பதிலை வியாழக் கிழமை தாக்கல் செய்யுமாறும், இதன் அடுத்த விசாரணை பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தது. விசாரணை இடத்தை மாற்றுவது குறித்து பிப்ரவரி 3ம் தேதி சிபிஐயின் பதிலை நீதிமன்றம் கேட்டிருந்தது. வழக்கு சாட்சிகள் பெரும்பாலானவர்கள் தில்லி யில் உள்ளனர். காஜியாபாத்தில் ஆபத்தான சூழ்நிலை உள்ளது என, தல்வார் தம்பதி யினர் மனுவில் கூறி யிருந்தனர். ராஜேஷ் தல்வார் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கத்தி குத்து தாக்குதல் நடந்தது. இம்மனு தொடர்பாக, சிபிஐ 4 வாரத் தில் பதிலளிக்க கூறியிருந்தது. கடந்த 2008ம் ஆண்டு தல்வார் தம்பதியின் ஒரே மகளான 14 வயது ஆருஷி மேமாதம் 15-16 ம் தேதி இடையே, இரவில் இறந்து கிடந்தார். அவரது வீட்டு ஊழியர் ஹேம ராஜ், மர்மமான முறையில், மறுநாள் வீட்டு மாடியில் இறந்துகிடந்தார். இது தொடர்பாக 2008ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி ராஜேஷ் தல்வார் கைது ஆனார்.

Leave A Reply

%d bloggers like this: