ஹைதராபாத், பிப்.21- தெலுங்கு தேசம் கட்சி, டிஆர்எஸ் ஆகிய கட்சிகள் தங்களுடைய கோரிக்கை களில் விடாப்பிடியாக இருந் ததைத் தொடர்ந்து ஆந்திர மாநில சட்டமன்றம் செவ் வாயன்று ஒத்திவைக்கப்பட் டது. மாநிலத்தின் கள்ளச் சாராய வலையமைப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் உறுப்பி னர்கள் வலியுறுத் தினர். இந் தப் பிரச்சனை செவ்வா யன்று விவாதத் திற்கு எடுத் துக்கொள்ளப் படும் என்று பேரவைத்தலைவர் நாதேந் திலா மனோஹர் கடந்த வாரம் அறிவித் திருந்தார். ஆனால், தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று டிஆர்எஸ் வற்புறுத் தியது. இரு கட்சிகளும் தங் களது கோரிக்கைகளை வலி யுறுத்தியதைத் தொடர்ந்து அவையில் கூச்சல் நிலவி யது. அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்படுவ தாக பேரவைத்தலைவர் அறிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: