ஐதராபாத், பிப். 21 – மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.மது ஹைதராபாத் பழம்நகர் பகுதியில் எம்ஐஎம் கட்சி குண்டர்களால் தாக்கப்பட் டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஹைதராபாத்தில் பழ மையான நகர்ப்பகுதிகளில் உள்ள பாவினிபுரத்தில் காவல்துறையின் தொந்தர வைத் தாங்க முடியாமல் தற் கொலை செய்து கொண்ட அகில் என்பவரின் குடும்பத் தினருக்கு ஆறுதல் கூற மது சென்றார். எம்ஐஎம் கட்சி குண்டர்களின் அக்கிரமங் களை அகில் எதிர்த்து வந் தார். அகிலின் வீட்டை மது அடைந்தவுடன் எம்ஐஎம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மும்தாஜ் கான், மாநகராட்சி உறுப்பினர் வஜித் அலி ஆகியோரின் தலைமையில் வந்த குண் டர்கள் தலைவரையும் தொண்டர்களையும் தாக்கி னர். காவல்துறை வருவதற்கு தாமதமானது. காவல்துறை வந்தவுடன் அவர்கள் ஓடி விட்டனர். தாக்கப்பட்ட பின் மது செய்தியாளர்களிடம் பேசி னார். எம்ஐஎம் நடத்திய வன் முறையைக் கண்டித்த அவர் நகரின் பழைய பகுதியொன் றும் அவர்களின் கூடாரம் அல்ல என்று கூறினார். சட்டமன்றத்தில் எம்ஐ எம் தயவால் காங்கிரஸ் பிழைத்து நிற்பதால், அவர் களின் அட்டகாசம் அதி கரித்துக் கொண்டே வரு கிறது. தாக்குதல்களைத் தடுப்பது பற்றி காவல்துறை கவலைப்படவில்லை என்று அவர் கூறினார். ஹைதராபாத் பழம்நகர் பகுதியில் சிபிஎம் செயல் பாடு அதிகரித்து வரு வதால் எம்ஐஎம் கட்சிக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அதன்மேல் அதிருப்தி உருவாக்கும் நிகழ்வுகளை அது தடுக்க விரும்புகிறது. அதன் விளை வாகவே மது மீது தாக்குதல் நடத்தப் பட்டது. இப்பகுதி யில் மது தாக்கப்படுவதும் புதிதல்ல. இப்பகுதியில் உள்ள மோச மான கட்டமைப்பு பிரச்ச னையை அவர் விவாதப் பொருளாக்கியுள்ளார். ஹைதராபாத் நகர மேய ராக, காங் கிரஸ் – எம்ஐஎம் கூட்டணியின் சுழற்சி முறையில் தற்போது எம்ஐ எம் உறுப்பினர் மேயராக உள்ளார். சிபிஎம் மாநிலச் செய லாளர் பி.வி.ராகவுலு உஸ் மானியா மருத்துவமனைக் குச் சென்று மதுவை நலம் விசாரித்தார். மது தாக்கப் பட்டதற்கு கண்டனம் தெரி வித்த அவர், தாக்குதலில் தொடர்புள்ள எம்ஐஎம் சட்டமன்ற உறுப்பினரை யும் மாநகராட்சி உறுப்பி னரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார். நகரின் பழைய பகுதி எம்ஐஎம் குண் டர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: