சென்னை, பிப். 20- ஆதி திராவிடர்களுக் காக நிலங்களை கையகப் படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் விரை வில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகர், விஜய குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது: ஆதிதிராவிடர்கள் நலத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் மத்திய சட்டத்தின்படி ஆம்பூர் அருகே உள்ள சாணான்குப் பத்தில் எங்களுக்கு சொந்த மான 922 சதுர மீட்டர் எங்கள் நிலத்தை ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியி னர்களுக்கான வீட்டுத் திட் டத்தில் தமிழக அரசு கைய கப்படுத்தியது. இது கடந்த 1993ல் அரசிதழிலும் வெளி யிடப்பட்டது. மத்திய சட்டத்தின்படி இந்த நிலத்தை கையகப் படுத்தியது சட்ட விரோத மானது. எங்களுக்கு அந்த இடத்தை மீண்டும் தரு மாறு அரசுக்கு பல முறை மனு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, அந்த இடத்தை எங்களுக்கு மீண் டும் ஒதுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி தன பாலன் முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு: மாநில சட்டத்தின்படி ஆதிதிராவிடர் நலத் திட்டங் களுக்காக அந்த இடத்தை கையகப்படுத்த அரசு அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட் டுள்ளபடி ஆதிதிராவிடர்க ளுக்கு உரிய நலத்திட்டங் களை செயல்படுத்த அதிகாரி கள் முன்வர வேண்டும். மாநில அரசின் கொள்கை யின்படி அந்த இடத்தை கையகப்படுத்த நீதிமன்றம் உரிமையளித்திருந்தும் அரசு அதிகாரிகள் மெத்தன மாக இருக்கின்றனர். நீதி மன்ற உத்தரவை செயல் படுத்தாமல் அதிகாரிகள் நடந்துள்ளனர். எனவே, இந்த நிலத்தை கையகப் படுத்தி ஆதிதிராவிடர் நலத் திட்டத்துக்காக பயன் படுத்த அதிகாரிகள் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும். எனவே, மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்படு கிறது. இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.