தஞ்சை, பிப்.21- தஞ்சாவூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற் றும் தொழிலாளர்கள் சங் கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து செவ்வாயன்று கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் கே.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயக்குமார், துணைச் செயலாளர் ஏ.தர்மராஜ் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி. மூர்த்தி, பொருளாளர் ஏ. ஜெயராஜ் ஆகியோர் பேசி னர். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.செந் தில்குமார் துவக்கிவைத்து பேசினார். சிஐடியு மாவட்ட நிர்வாகி இ.டி.எஸ். மூர்த்தி, சாலைப்போக்குவரத்து சங்க மாவட்டச் செயலா ளர் துரை.சசிக்குமார் வாழ்த் திப் பேசினர். நிறைவாக சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகள் ஆட்டோ வாங்க தேசிய வங்கிகள் மூலம் தொடர்ந்து கடன் வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பேட்ஜ் வழங்க வேண்டும். தற்காலிகமாக பதிவு செய்த டீசல் ஆட்டோவிற்கு பர் மிட் வழங்கவேண்டும். ஆட்டோ ஸ்டாண்டுகளை நகராட்சிகள் முறைப்படுத்த வேண்டும், ஆர்டிஓ அலுவ லக படிவங்களை தமிழில் வழங்கவேண்டும். தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.