சேலம், பிப். 21- சேலத்தில் அருந்ததிய சமூகத்தினருக்கு ஒதுக்கப் பட்ட நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்ததை கண்டித்து அருந்ததியர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி கிராமத் தில் அரசின் சார்பில் 7.5 ஏக்கர் நிலம் அருந்ததிய சமூகத்தினருக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. இந்நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிர மித்து, அவற்றை பட்டா போட்டு விற்பனை செய்து வருகிறார். எனவே அருந்த திய சமூகத்தினருக்கு ஒதுக் கப்பட்ட நிலத்தை அரசு தலையிட்டு மீட்டுத் தர வேண்டும். மேலும் இந்த இடத்தில் உண்டு உறை விடப்பள்ளி அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி அருந்ததியர் மக்கள் இயக் கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சின்னதுரை தலைமை தாங்கினார். இதில் அமைப்பின் பொதுச்செய லாளர் வழக்கறிஞர் பிரதா பன், மாநகர அமைப்பா ளர் இளையராஜா, அருண் குமார், செல்வராஜ் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: