வாஷிங்டன்,பிப்.21 – அமெரிக்காவை, இந்தியா தொடர்ந்து அவ மானப்படுத்தி வருவதாக அமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்கு மதி செய்வதற்கு, ஐரோப் பிய யூனியன் தடை விதித் துள்ளது. சர்வதேச அள வில் ஈரானைத் தனிமைப் படுத்துவதற்காக, ஈரானின் எண்ணெய்யை வாங்க வேண்டாம் என, அமெரிக் கா தனது நட்பு நாடுகளிடம் கூறி வருகிறது. இந்தியா அதைப் புறக் கணித்து விட்டு தொடர்ந்து ஈரானிடம் இருந்து எண் ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத் தின் முன்னாள் சார்புச் செய லர் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறியிருப்பதாவது: ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வது என்ற இந்தியாவின் முடிவு, அந்நாட்டோடு நெருங்கிப் பழகி வரும் அமெரிக்கா வுக்கு மிகப் பெரிய ஏமாற் றம் தான். மேலும், கடைசியாக இருந்த மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்தியாவின் அடுத்தடுத்த அரசுகளுடன் மேற் கொண்ட அரசியல் ரீதியி லான உறவுகளுக்குப் பின்ன டைவுதான். ஈரான் விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செல்லாமல் தனித்துச் செல்வதாக இந் தியா எடுத்த முடிவு, அதன் தலைமைத்துவம் பற்றிய சந் தேகங்களையும் எழுப்பு கிறது. இவ்வாறு பர்ன்ஸ் தெரி வித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.