நாகையில் 2012 பிப்ரவரி 22 ல் துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20வது மாநில மாநாட்டில் கட்சியில் பணியாற்றிய மூத்த தோழர்களை பாராட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ண கிரியில் அந்த சிறப்புக்குரிய தோழராக நாக ரத்தினம் அண்ணாஜியை மாவட்டச் செயற்குழு தீர்மானித்தது. அவருடன் துணைக்கு வரும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜி.சேகர் சில தோழர்களுடன் நாகரத்தினம் அண்ணாஜி குடியிருக்கும் வாடகை வீட் டிற்கு வந்து மாநாட்டிற்கான அழைப்பித ழையும் மாநிலச் செயலாளரின் நேரடி கடி தத்தையும் கொடுத்தார். அழைப்புக்கு நன்றி தெரிவித்தவர் தன்னால் பயணம் செய்ய இயலாததை வருத்தத்தோடு தெரிவித்தார். இந்நிலையில் தீக்கதிருக்கு அவர் அளித்த நேர்காணல்: கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போது உறுப்பினராக சேர்ந்தீர்கள்? 1948 ஆம் ஆண்டு எனது 18 ஆவது வயதில் கட்சியில் சேர்ந்தேன். என்னு டைய 12வது வயதில் அப்பா இறந்து விட்டார். சேலத்தில் அம்மாவுடன் இருந்த போது எனது படிப்பு தடைப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது தான் தாய்மாமா டாக்டர் அண்ணாஜி கிருஷ்ணகிரிக்கு என்னை அழைத்து வந்து படிக்க வைத் தார். லலிதா அக்காவும் அண்ணாஜியும் செய்து வந்த மக்கள் பணி என்னை கவர்ந் தது. கட்சியை பற்றிய அறிமுகம் சேலத்தி லேயே ஏற்பட்டது. மாணவ பருவத்தில் நீங்கள் மேற் கொண்ட அரசியல் பணிகள் என்ன? தோழர் பார்வதி கிருஷ்ணனுடன் இணைந்து மாணவர் சங்கத்தில் பணி யாற்றினேன். ஜனசக்தி மற்றும் காலணா அரையணா விலையில் கட்சி வெளியி டும் சிறு சிறு பிரசுரங்களை கட்சி கூட்டங் களில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். கிருஷ்ணகிரிக்கு வந்த போது இங்கு விவசாயிகள் சங்க மாநாடு நடத்த தோழர் பி.எஸ்.ஆருடன் இணைந்து தோழர்கள் லலிதாவும் அண் ணாஜியும் பணியாற்றிக் கொண்டிருந்தார் கள். அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். கிருஷ்ணகிரியில் அந்த மாநாட்டை நடத்த முடியாத அளவுக்கு நெருக் கடி ஏற்பட்டது. பின்னர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் அந்த மாநாட்டை நடத்தினார் கள். நான் கலந்து கொண்ட முதல் மாநாடு இதுதான். அதன் பிறகு மன்னார்குடியில் நடந்த மாநாட்டிலும் கலந்து கொண்டேன். பொன்மலை யில் நடந்த ரயில்வே தொழி லாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டி ருக்கிறேன். அங்கு தான் முதல் முறையாக தோழர் பாப்பா உமாநாத்தை சந்தித்தேன். மாதர் இயக்கத்தில் நீங்கள் செய்த குறிப்பிடத்தக்க பணிகள்-அனுபவங் கள் என்ன? கிருஷ்ணகிரி மகளிர் சங்கம் என்கிற அமைப்பை வசதி படைத்த குடும்பத்து பெண்களை இணைத்து 1970 ல் துவக்கி னோம். மிகவும் வறிய நிலையில் இருந்த பெண்களுக்கு தையல் பயிற்சி பள்ளி, குழந்தைகளுக்கு மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தினோம். இப்போதும் அந்த பணிகள் தொடர்கின்றன. வாச் சாத்தியில் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வந்த போது தினமும் நீதி மன்றம் சென்றேன். ஒரு முறை எதிர் தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ணிடம் எழுப்பிய கேள்வி எனக்கு நெரு டலை ஏற்படுத்தியது. பார்வையாளர் பகுதியிலிருந்து நான் பேச முயன்று நீதி பதியின் கண்டனத்திற்கு உள்ளானேன். மகளிர் மன்றம் மூலமாக வாச்சாத்தி பெண் களுக்கு உதவிகள் செய்துள்ளோம். அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் துவக்கப் பட்டது முதல் பல்வேறு பொறுப்புகளில் இருந்து செயல் பட்டுள்ளேன். நீங்கள் கட்சியில் பணியாற்றிய காலம் நெருக்கடி நிறைந்தது. அது போன்ற அனுபவம் ஏதேனும் உங்க ளுக்கு ஏற்பட்டுள்ளதா? கட்சித் தலைவர்கள் தலைமறைவாக இருந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது 1964ல் ஒன்று பட்ட சேலம் மாவட்டத்தின் கட்சி அலுவலக பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்சியின் குறிப்புகளை தலைவர்களிடம் சேர்க்கும் பொறுப்பையும் செய்து வந்தேன். இது காவல் துறையினருக்கு தெரிந்து என்னை தேடத்தொடங்கினார்கள். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் பெங்களூருவில் உறவினர் வீட்டில் சிறிது காலம் தலை மறைவாக இருந்தேன். தோழர் அண்ணாஜியுடன் மருத் துவப் பணி, அரசியல், குடும்பம் என இணைந்து பயணித்த நீங்கள் அவரது சிறப்புகளாக எவற்றை குறிப்பிட விரும்புகிறீர்கள்? தோழர்களையும் நண்பர்களையும் எப்போதும் அரவணைத்துப் பாராட்டுவார். சின்னசாமி போன்ற தோழர்களை வீட் டில் தங்க வைத்து பாதுகாத்தார். தோழர் கள் ஜீவா, பி.எஸ்.ஆர், பி.சி.ஜோஷி அஜய் கோஷ், பசவபுன்னையா, ஏ.கே.ஜி, கேரளி யன், பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி, உமாநாத், பி.ஆர்.பி போன்ற தோழர்களை வீட்டில் தங்க வைத்து உபசரிக்கும் வாய்ப்பு அவர் மூலம் எனக்கு கிடைத்தது. மதராஸ் மாகாண தேர்தலில் கட்சியின் கிருஷ்ண கிரி தொகுதி வேட்பாளராக அண்ணாஜி போட்டியிட்டார். அப்போது தெலுங்கில் பிரச்சாரம் செய்ய தோழர் சுந்தரய்யாவின் சகோதரர் இரண்டு மாதங்கள் எங்களோடு இருந்தார். பெரியார் பாரதிதாசன், தெ.பொ. மீனாட்சி சுந்தரம் போன்றவர்களை வர வழைத்து அரசியல் இலக்கிய சொற் பொழிவுகளையும் நடத்துவார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கிருஷ்ண கிரியில் மாநாடு நடத்தினார்கள். அதில் கலந்து கொள்ள வந்த அண்ணா, நெடுஞ் செழியன் உள்ளிட்ட தலைவர்கள் எங்க ளது வீட்டுக்கு வந்தார்கள். டாக்டர் சுப்ப ராயன் அண்ணாஜியின் பால்ய நண்பர். அவர் அமைச்சராக இருந்த போது ஒரு முறை வீட்டுக்கு வந்து எங்களோடு உண வருந்தினார். “காங்கிரஸ்காரன் எப்படி கம்யூனிஸ்டின் வீட்டில் உணவருந்த லாம்” என்று சுப்பராயனுடன் அவரது கட்சிக்காரர்கள் சண்டை போட்டார்கள். அதன் பிறகு அவர் வரும்போதெல்லாம் விருந்தினர் மாளிகையில் சந்தித்துப் பேசுவார். ஒரு முறை கிருஷ்ணகிரி நக ரில் உள்ள கிட்டம்பட்டி மக்களுக்கும், பாப் பாரப்பட்டி மக்களுக்கும் மோதல் ஏற் பட்டது. அண்ணாஜி தன்னந்தனியாக இரண்டு பிரிவினருக்கும் மத்தியில் நின்று கொண்டு அந்த மோதல் பெரும் கலவர மாக மாறாமல் தடுத்தார். இதை ஒரு பெரிய நிகழ்வாகக் கூறி அண்ணாஜியை பலரும் பாராட்டினார்கள். கட்சியின் இளம் தலைமுறையின ருக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? மார்க்சியத்தை தெளிவாக கற்றுக் கொள்ளுங்கள். கட்சியின் கொள்கை களை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும். இப்போது மார்க் சிஸ்ட் இதழ் சிறப்பாக வெளிவருகிறது. ஒவ்வொரு தோழரும் தவறாமல் படிக்க வேண்டும். 82 வயதிலும் கடுமை யான ஆஸ்துமாவுக்கு சவால் விட்டு வாசிப்பை மூச்சாக கொண்டிருக்கும் மூத்த தோழர் நாக ரத்தினத்துக்கு செவ்வணக்கங்கள். சந்திப்பு: சி. முருகேசன்

Leave a Reply

You must be logged in to post a comment.