புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணை தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமைப்புகளின் தலைவர் கள் ஊழல் கண் காணிப்பு ஆணையத்தின் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத் தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் நாளை முதல் நேரில் ஆஜராகுமாறு ஊழல் கண் காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் 3 அமைப்புகளின் தலை வர்களும் நாளை முதல் வெவ்வேறு தினங் களில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 2ஜி ஊழல் வழக்கில் விசாரணை அறிக் கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Leave A Reply