துபாய், பிப். 20- 2012 ஆகஸ்ட் 12 அன்று 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிரிக்கெட் கோப்பை போட்டிகளின் முதல் போட்டியில் மேற்கிந்தி யாவை எதிர்த்து இந்தியா ஆடவுள்ளது. இந்தியா இடம் பெற்றுள்ள குழு எளியதாகும். இந்தியா இடம் பெற் றுள்ள குழு ‘சி’யில் மேற் கிந்தியா, ஜிம்பாப்வே, பாப் புவா நியூகினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள் ளன. இந்த கோப்பையை இந்தியா இரண்டுமுறை வென்றுள்ளது. 2000ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போட்டியில் முகமதுகைப் தலைமை யிலான இந்திய அணி வென்றது. 2008ம் ஆண்டில் மலேசியாவில் நடந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 14ல் ஜிம்பாப் வேயை எதிர்த்தும், ஆகஸ்ட் 16ல் பாப்புவா நியூகினி யாவை எதிர்த்தும் இந்தியா ஆடவுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. டெஸ்ட் தகுதிபெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, மேற் கிந்தியா, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்க தேசம் ஆகிய பத்து அணிக ளும் நேரடி தகுதி பெற்றுள் ளன. நேபாளம், அயர் லாந்து, ஸ்காட்லாந்து, ஆப் கானிஸ்தான், பாப்புவா நியூகினியா, நமீபியா ஆகிய ஆறு அணிகளும் தகுதி போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை நான்கு குழுக் களாகப் பிரிக்கப்பட்டுள் ளன. குழு சி மேலே கொடுக் கப்பட்டுள்ளது. குழு ‘ஏ’ யில் ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து, நேபாளம், அயர் லாந்து ஆகிய அணிகளும் குழு ‘பி’ யில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் குழு ‘டி’யில் இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நமீபியா ஆகிய அணிகளும் இடம் பெற் றுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.