எளிய அணியுடன் சமன் செய்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட இந்திய மகளிர் அணி கனடாவை 4-1 என்ற கோல்களில் தோற்கடித்தது. ஆடவர் அணி இரண்டா வது பெரும் வெற்றியைப் பெற்றது. புதுதில்லியில் மேஜர் தயான் சந்த் தேசிய விளை யாட்டு அரங்கில் 2012 லண் டன் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இருபாலரிலும் முதலிடம் பெறும் அணி கள் ஒலிம்பிக் போட்டி களில் பங்கேற்கும். இந்திய மகளிர் கன டாவை 4-1 என வென்றனர். இந்திய மகளிர் ஆவேசமாக வேகத்துடன் ஆடினர். கனடாவின் தற்காப்பை பல முறை துளைத்தனர். ஆனா லும் கோல் அடிக்கும் கூர் மையில் பலவீனம் தொடர் கிறது. ஏழாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார் னரைத் தவறவிட்டனர். பத் தாவது நிமிடத்திலும் வாய்ப்பைத் தவறவிட்டனர். பதினாறாவது நிமிடத் தில் கிடைத்த பெனால்டி கார்னரில் சௌந்தர்யா, அணியின் முதல் கோலை அடித்தார். பத்தொன்பதாம் நிமிடத்தில் ராணி ராம்பால் மூன்று கனடா வீரர்களை ஏமாற்றி முன்னேறி இரண் டாவது கோலை அடித்தார். முன்னிலை கிடைத்தவுடன் சொதப்பலும் தொடங் கியது. கிடைத்த சில வாய்ப் புகளைத் தவறவிட்டனர். 29ம் நிமிடத்தில் சுசிலா சானு அணியின் மூன்றா வது கோலை அடித்தார். 49ம் நிமிடத்தில் அனுராதா அணியின் நான்காவது கோலை அடித்தார். கனடா வின் ஆறுதல் கோலை ஹன்னா ஹான் அடித்தார். கோல் மழை ஆடவர் அணி முதல் நாள் விட்ட இடத்தில் இருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. இத்தாலியை 8-1 என்ற கோல் களில் இந்தியா வென்றது. இந்திய அணி காலூன்றி ஆட ஆரம்பித்தவுடன் இத் தாலி திணறியது. இந்திய பெனால்டி கார்னர் நிபுணர் களான சந்தீப் சிங்கும் வி. ஆர்.ரகுநாத்தும் முதல்பாதி யில் நான்கு கோல்களை அடித்தனர். சந்தீப் (4,22,23ம் நிமிடங்கள்) மூன்று கோல் களையும், ரகுநாத் (12) ஒரு கோலையும் அடித்தனர். அதற்குப் பின் தாக்குதல் வீரர்கள் முன்னிலைக்கு வந் தனர். அவர்கள் முதல்பாதி யில் இரண்டும், இரண்டாம் பாதியில் இரண்டும் அடித் தனர். 30ம் நிமிடத்தில் சிவேந்திர சிங் குறுக்காக அடித்த பந்தை எஸ்.வி.சுனில் கோலுக்குள் அடித்தார். 32ம் நிமிடத்தில் குர்விந்தர் சிங்சண்டி ஒரு கோல் அடித் தார்.இதற்கிடையில் 17ம் நிமிடத்தில் இத்தாலியின் அலெசான்ட்ரோ நான்னி, பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். முதல்பாதி முடிவில் இந்தியா 6-1 என முன்னிலை வகித்தது. இத்தாலியப் பகுதியில் கிடைத்த பந்தை சந்தீப் குறுக்காக அடித்தார். அதை எஸ்.வி.சுனில் கோலுக்குள் திருப்பிவிட்டார். 52ம் நிமி டத்தில் சிவேந்திரா சிங் அணியின் எட்டாவது கோலை அடித்தார். இந்தியா புள்ளி கள் பட்டியலில் முதலிடத் தில் உள்ளது. திங்கள் ஓய்வு நாளாகும். மகளிர் பிரிவின் மற்ற போட்டிகளில் தென் ஆப் பிரிக்கா உக்ரைனை 2-0 என வென்றது. போலந்தை 4-1 என இத்தாலி வென்றது. ஆடவரில் போலந்து 3-2 என்ற கோல்களில் கன டாவை வென்றது. பிரான்ஸ் 9-0 என்ற கோல்களில் சிங்கப்பூரை வென்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.