புதுதில்லி: 11-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் வேளாண்துறை வளர்ச்சி 3.5 சதவீதம் எட்டும் நிலை உள்ளது. இந்த வளர்ச்சி நிலையை 2012 – 17ம் ஆண்டு கால கட்டத்தில் 4 சதவீதமாக அதிகரிக்கவேண்டும் என, பிரதமர் மன் மோகன்சிங் வலியுறுத்தினார். தலைநகர் தில்லியில் திங்கட்கிழமை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத் தின் (ஐஏஆர்ஐ) பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்று கையில் , 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக ளுக்கு செல வழிப்பதை இருமடங்காக அதிகரிக்க அரசு உறுதிகொண்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத் தியில் (ஜிடிபி) தற்போது 1 சதவீதம் செல விடப்படுகிறது. 11வது ஐந்தாண்டுத் திட்டக் (2007 – 2012) காலகட் டத்தில் 3.5 சதவீத வேளாண்துறை வளர்ச்சி இருக் கும். 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2012 -2017) இந்த வளர்ச்சியை 4 சதவீத மாக உயர்த்தவேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தினார். வேளாண்துறை வளர்ச்சியில் 10வது ஐந்தாண்டுத்திட்டக் காலத்தில் தேக்க நிலை ஏற்பட்டு 2.5 சதவீத வளர்ச்சி நிலையே காணப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: