புதுதில்லி: உலகின் மிக விலை குறைந்த ஆகாஷ் கம்ப்யூட்டர்களின் தரத்தை உயர்த்தி, விலையை உயர்த்தாமல் பழைய விலையிலேயே வழங்கப்படும் என மனிதவேள மேம்பாடு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் திங்கட் கிழமை கூறினார். ஆகாஷ் கம்ப்யூட்டர்கள் தயாரித்த டேட்டா விண்ட் நிறுவனத்துடன் ஒப் பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் சி-டாட் மற்றும் ஐடிஐ நிறுவனத்துடன் இணைந்து, தரம் உயர்த்தப்பட்ட கம்ப்யூட்டர்களை விலை உயர்த்தாமல் வழங்க முடிவு செய் துள்ளோம். இந்த ஆகாஷ் கம்ப்யூட் டர்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்படு கிறது. நிர்ணயிக்கப்பட்ட கால கட்டத் திலேயே இந்த கம்ப்யூட்டர்கள் விற் பனைக்கு வரும் என அவர் தெரிவித் தார். இந்த ஆண்டில் ஆகாஷ்-2 கம்ப்யூட் டர் விற்பனைக்கு வரும். பள்ளி குழந் தைகளுக்கு தரம் வாய்ந்த கம்ப்யூட்டர் களை வழங்கவேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும். இதுபோன்ற கம்ப்யூட்டர் உலகம் முழுவதும் உருவாக்க விரும்புகிறார்கள். ஆகாஷ் கம்ப்யூட்டர் சராசரியாக 49 அமெரிக்க டாலர் (ரூ.2414) மதிப்பில் விற் பனை செய் யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: