சென்னை, பிப். 20 – மவுண்ட்-மேடவாக்கம் சாலை, கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு, சிவப்பு நிற ஆம்னி வேனில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், துப் பாக்கி முனையில் 14 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. இதனால் அப் பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வங்கியில் கைரேகை நிபு ணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய்கள் கொண்டு கொள்ளையர் களை கண்டு பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. விமான, ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் கண்காணிக்கப் பட்டு வருகிறது. ஒரு மாதத் திற்கு முன் பாக பெருங்குடி யில் உள்ள பரோடா வங்கி யில் புகுந்த கொள்ளையர் கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென் றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: