மெக்சிகோ, பிப். 20 – அபோடக்கா நகரில் உள்ள சிறையில் நடந்த கலவரத்தில் குறைந்தது 40 பேர் மடிந்திருக் கக்கூடும் என்று செய்திகள் கூறுகின்றன. சிறை ஆணை யர் மற்றும் கலவரம் நடந்த போது பணியில் இருந்த காவ லர்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இரவு இரண்டு மணிக்கு நடந்தது. சிறை உடைக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், அதை மறைப்பதற் காக கலவரம் நடத்தப்பட்டி ருக்கும் என்றும் மாநில பொது பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோர்க்டோ மெனி கூறினார். இரு பிளாக்கு களில் இருந்த 1500 பேருக் குள் மோதல் ஏற்பட்டது. சிறை யில் எஞ்சி இருந்த கைதிகள், இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சிலர் தப்பி இருக் கக் கூடும் என்பது தெரியவந்தது.

Leave A Reply

%d bloggers like this: