அறந்தாங்கி, பிப். 20 – வரலாறு காணாத மின் வெட்டை கண்டித்து இந் திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் அறந்தாங்கி ஒன்றி யக்குழு சார்பில் தீப்பந்தங் களை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் எம்.சாத் தகுமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அலெக்ஸ் பாண்டி யன், செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளா ளர் ஆர்.கருணா, மாவட் டக் குழு உறுப்பினர் வி. ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மா.முத்துராமலிங்கன், எஸ். கவிவர்மன், நகரச் செயலா ளர் ஏ.பாலசுப்பிரமணியன், எஸ்.பாண்டியன், கே.தங்க ராஜ் ஆகியோர் போராட் டத்தை ஆதரித்துப் பேசி னர்.

Leave A Reply

%d bloggers like this: