கரூர், பிப்.20- கோவை சின்னியம் பாளையம் தியாகிகளின் நினைவு ஜோதி பயணம் திருப்பூர், ஈரோடு மாவட் டங்கள் வழியாக திங்க ளன்று காலை கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் குறுக்கு சாலையை வந்த டைந்தது. அங்கு ஜோதி பய ணக் குழுவிற்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் கரூர் ஒன் றியச் செயலாளர் எஸ்.சண் முகசுந்தரம் தலைமை வகித் தார். மாநிலக் குழு உறுப் பினர் ஜி.ரத்தினவேலு, பய ணக்குழு தலைவர் சி.பத்ம நாபன், கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் கா. கந்தசாமி ஆகியோர் தியாகி களின் வரலாறு குறித்து உணர்ச்சிமிகு சிறப்புரை யாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவா னந்தம், என்.ராஜு, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே. சண்முகம், எம்.வேலுசாமி, சி.முருகேசன், எஸ்.பி.ஜீவா னந்தம், ஏ.காதர்பாட்ஷா, கா.பரமத்தி ஒன்றியச் செய லாளர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டு வழி நெடுங்கிலும் நின்று வர வேற்பு அளித்தனர். கரூர் நகரக்குழு சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற வர வேற்பு நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். ஜோதி பயணக்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப் புரையாற்றினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கா.கந்தசாமி,தோகைமலை ஒன்றிய செயலாளர் பி. இலக்குவன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கே.வி. கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டு கரூர் பஜா ரில் சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவு ஜோதியை கையில் ஏந்திய படி உணர்ச்சி பொங்க கோஷமிட்டபடி சென்ற னர். இந்நிகழ்ச்சி மக்களின் மத்தியில் பெரும் வரவேற் பை பெற்றது. குளித்தலை ஒன்றியத் தின் சார்பில் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செய லாளர் பி.ராஜு தலைமை வகித்தார். கடவூர் வட்டச் செயலாளர் கே.சக்திவேல், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஏ.ரெங்கரா ஜன், வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.