கொல்கத்தா, பிப். 20- பராக்கா குறுக்கு அணையின் இரு மதகுகள் பழுதடைந்த தகவலை மத் திய அரசு ரகசியமாக வைத் துக் கொண்டது. இதனால் வங்கதேசத்துக்கு கூடுதலாக தண்ணீர் சென்றுவிட்டது என்று மேற்குவங்க முதல் வர் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது புகார் தெரிவித் துள்ளார். பொறுப்பற்ற முறையில் வேண்டுமென்றே மதகுகள் பழுதான விஷயம் மறைக் கப்பட்டுள்ளது. பாகீரதி நதி யில் நீர்மட்டம் குறைந்த பின்னரே, எங்கோ தவறு நடந்துள்ளது என்பதை மேற்குவங்க அரசு உணர்ந் தது என்று பிரதமருக்கு எழு திய கடிதத்தில் அவர் சுட் டிக்காட்டியுள்ளார். அக் கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. சனிக்கிழமையன்று மத் திய நீர்வளத்துறை அமைச் சகக் குழு, பழுதடைந்த மத குகளை பார்வையிட்டது. ஒரு சில நாட்களுக்குள் பழுது சரிபார்க்கப்படும் என்று அக்குழு உறுதி அளித்துள்ளது. இதற்கிடையில் மத்திய வெளியுறவுத்துறை செய லாளர் ரஞ்சன் மத்தாய், மேற்குவங்க முதல்வரைச் சந்தித்து, கிழக்குப் பகுதி களில் உள்ள அண்டை நாடு களுடனான உறவு குறித்து விவாதித்துள்ளார். டீஸ்டா நதி நீர்ப்பங்கீடு உடன்பாடு செப்டம்பர் 2011ல் மம்தா வின் முரண்பாடான நட வடிக்கையால் கையெழுத் தாகவில்லை. இப்பின்னணி யில் முக்கியத்துவம் பெறும் இச்சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது. இது ஒரு வழக்க மான சந்திப்பு என்று மம்தா செய்தியாளர்களிடம் கூறினார். சிதம்பரத்தை புறக்கணித்தார் கொல்கத்தாவின் அரு கில் உள்ள பாடு என்னும் இடத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு மையத் திறப்பு விழாவில் மம்தா பங்கேற்க வில்லை. இம்மையத்தை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தொடங்கி வைத் தார். தன்னுடைய இல்லா மையை நிரப்புவதற்காக அவர் திரிணாமுல்லின் பொதுச் செயலாளரும் மத் திய அமைச்சருமான முகுல் ராய், மாநில உணவுத்துறை அமைச்சர் ஜோதி பிரியோ முல்லிக் ஆகிய இருவரை யும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசுக்கும், மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. லோக்பால் மசோதா, டீஸ்டா நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ப.சிதம்பரம் நிகழ்ச்சியை மம்தா புறக் கணித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: