மதுரை, பிப்.20- மதுரை சுற்றுச்சாலை யில் திங்களன்று காலை ஏற்பட்ட விபத்தில் கோவி லுக்குச் சென்ற 5 பேர் பலி யாயினர். திண்டுக்கல் நாகல்நக ரைச் சேர்ந்தவர் நடராஜன். முன்னாள் ராணுவ வீரர். இவரது அண்ணன் நாரா யணசாமி. இவரது மனைவி அருள்ஜோதி. நடராஜின் மகன் சுரேஷ்குமார் மற் றும் சரவணன் உட்பட 6 பேர் மகாசிவராத்திரியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்துள்ளனர். அங்கு அவர் கள் சென்று விட்டு திருச் சுழி புதுப்பட்டியில் உள்ள மற்றொரு கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் வந்த ஆம்னி வேன், மதுரை சுற்றுச்சாலை யில் வந்து கொண்டிருந்த போது மாட்டுத்தாவணியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற தனியார் பேருந்து சம்பக்குளம் விலக்கு அரு கில் மோதியது. இதில் வேனில் இருந்த நடராஜன், அருள்ஜோதி, நாராயண சாமி, சுரேஷ்குமார் உள் ளிட்ட 5 பேர் சம்பவ இடத் திலேயே பலியாயினர். சர வணன் மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை திருமங்கலம் தீய ணைப்புத்துறையினர் மீட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலி யான சுரேஷ்குமார் பி.இ. பட்டதாரியாவார். இந்த விபத்து குறித்து திருநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.