தமிழகத்தில் அன்றாடம் வழிப் பறி, கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை என்றாகிவிட்டது. சென்னை யில் ஜனவரி மாதம் மட்டும் 28க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற் றுள்ளன. இவற்றைத் தடுக்க வேண்டிய காவல்துறை என்ன செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது பெரம்பூரில் உள்ள கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகுந்த கொள் ளையர்கள் அங்கிருந்த பெட்டிகளை உடைத்து 2 காவலர்களின் சம்பளப் பணம் மற்றும் அடையாள அட்டை களை திருடிச் சென்றுள்ளனர் என்ற செய்தி வருகிறது. தமிழகத்தில் சட்டம் தன் கட மைச்செய்யும் என நினைத்துக் கொண் டிருந்த மக்களின் மனதில் இத்தகைய நிகழ்வுகள் கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளன. – ஜெ.கனி, கும்மிடிப்பூண்டி

Leave A Reply