காட்டுத் தீ மற்றும் அதன் பாதிப்பினால் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது வரை புள்ளிவிபரம் கிடைத்துள்ள காலகட்டமான 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3 லட்சத்து 39 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். குறிப்பாக, சஹாராப் பாலைவனத்திற்கு தெற்குப் பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் கடுமையானப் பாதிக் கப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் உயிரிழந் துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. அங்கு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் காட்டுத்தீக்குப் பலியாகியிருக்கிறார் கள். தங்கள் மதிப்பீடு பெரும்பாலான ஆய்வாளர் களுக்கே ஆச்சரியத்தை அளிக்கிறது என்று ஆஸ்தி ரேலியாவின் டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபே ஜான்ஸ்டன் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: