புதுக்கோட்டை, பிப்.20- தமிழக அரசு அமல் படுத்தி வரும் வரலாறு காணாத தொடர் மின் வெட்டைக் கண்டித்தும், விவசாயத்திற்கு போதுமான அளவிற்கு மும்முனை மின் சாரம் வழங்க விரைந்து நட வடிக்கை எடுக்க வலியுறுத் தியும் விவசாயிகள் புதுக் கோட்டை மின்சார வாரிய செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு திங்கட்கிழ மையன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.செபஸ்தியான் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்து மாவட்டப் பொரு ளாளர் ஏ.முருகவேல் பேசி னார். முடித்து வைத்து சங் கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.பொன்னுச்சாமி சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சங்கத்தின் மாவட்ட நிர் வாகிகள் ஏ.அண்ணாச் சாமி, பி.வீராச்சாமி, பி.ராம சாமி, கே.ஆர்.சின்னையா, வி.துரைச்சந்திரன், தென்றல் கருப்பையா, ஒன்றியச் செய லாளர்கள் எஸ்.பாண்டியன், எஸ்.காசி, டி.சத்தியமூர்த்தி, வி.ராஜலிங்கம், எம்.வீரப் பன், கே.எம்.சங்கர், எஸ். சேகர், எம்.முனியய்யா ஆகி யோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.