நாகப்பட்டினம், பிப்.20- அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பிரபல நாடகக் கலைஞரும், ’சென்னை கலைக்குழு’வின் இயக்குநரும், தமுஎகசவின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான பிரளயன் ஒருங்கிணைப்பாளராக இருந்து, நாகையில் நடைபெறும் சிபிஎம் மாநில மாநாட்டிற்கான பிரச்சார வீதி நாடகத்தை உருவாக்கினார். வடசென்னை ’விடியல்’ கலைக்குழுவின் இயக்குநரும், தமுஎகசவின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான ஜே.ஜேசுதாஸ், ’சென்னை கலைக்குழு’வைச் சேர்ந்த நாடகக் கலைஞர் வி.அசோக், சேலம் ’அக்னி’ கலைக்குழுவின் கலைஞர் ஜி.கண்ணன் ஆகியோரும் பிரளயனுடன் இணைந்து நாகையில் வீதிநாடகப் பயிற்சி அளித்தனர். இந்தப் பிரச்சார வீதி நாடகத்தை ‘நாகை நெல்மணி’ கலைக்குழுவினர் பிப்ரவரி 16 முதல் நாகை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 20 அன்று சீர்காழி வட்டத்தில் பல ஊர்களில் இந்த பிரச்சார வீதி நாடகம் நடத்தப்பட்டது. நாகை நெல்மணி கலைக் குழுவில் ஜி.பி.சிவா, எஸ்.மோகன்ராஜ், எஸ்.பழனிமுருகன், ஜே.வினோத், பி.உதயா, பி.காமராஜ், டி.பிரசாத், எஸ்.ராஜா, பி.கண்ணன், தமிழ்ச்செல்வம், பி.ஞான சேகரன் மாறும் இசைக்கலைஞர்களும் உள்ளனர். இவர்களுடன் தஞ்சை சுத்தானந்தம் தலைமையில் ’விழுதுகள்’ கலைக்குழுவினரும் பிரச்சார இசைப்பாடல் களை பாடி வருகின்றனர். இந்திய மாணவர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் வி.சிங்காரவேலு தலைமை யில் இந்தக் கலைக்குழுவினர் நாகை மாவட்டம் முழு வதும் பவனி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: