இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய விளைச்சல் அபாரமாக இருந்திருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். மார்ச் 31 அன்று நிறைவுபெறும் 11வது ஐந்தாண்டுத்திட் டத்தின் நிறைவில் 25 கோடி டன் உணவுப் பொருட் கள் உற்பத்தியாகும் நிலையை எட்டி விடுவோம் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட் டுள்ளார். விவசாயத்துறையில் சீர்திருத்தம், விவசாயப் பொருளாதாரப் புரட்டிப் போடுதல் என்று அவர் பேசிக் கொண்டே போனாரேயொழிய கொள்முதல் செய்வது, அதை மக்களுக்குக் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வது, இந்த அம்சங்களில் இருக்கும் பிரச்சனைகள் போன்றவை பற்றியெல்லாம் அவர் வாயைத் திறக்கவேயில்லை. சில நாட்கள் கழித்து ஏற்றுமதியில் கவனம் செலுத்தத் துவங்கி விடுவார் கள். அப்புறம் மீண்டும் பற்றாக் குறை கதைதான்.

Leave a Reply

You must be logged in to post a comment.