சென்னை, பிப்.20- பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமியின் மறை வுக்கு முதலமைச்சர் ஜெயல லிதா இரங்கல் தெரிவித் துள்ளார். சிறு வயதில் இருந்து மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்.என். லட்சுமி நடிப் பின் மீது மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். தன் னுடைய 13-வது வயதில் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைத்தார். முன் னாள் முதலமைச்சர் எம்ஜி ஆர், சிவாஜி, கமல், ரஜினி உட்பட பல முன்னணி நடி கர்களுக்கு அம்மாவாக நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக்கொண் டவர். பார்ப்பதற்கு எளிமையா கவும், பழகுவதற்கு மிக வும் இனிமையாகவும் இருப்பார். மைக்கேல் மதன காம ராஜன், மகாநதி,படையப்பா, சினேகிதியே, ரிதம், தேவர் மகன், விருமாண்டி, இதய வீணை, விவசாயி, பாபு, சங்கே முழங்கு, உதயகீதம், சிறை, ஜீன்ஸ், மாட்டுக்கார வேலன், பட்டிக்காடா பட்ட ணமா, ராமன் எத்தனை ராம னடி, சர்வர் சுந்தரம் உள்பட 1,500க்கும் மேற்பட்ட திரைப் படங்களிலும் முந்தானை முடிச்சு, தென்றல், சரவணன் மீனாட்சி போன்ற 6 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நாடகங்களி லும் நடித்துள்ள எஸ்.என். லட்சுமி, கடந்த சில ஆண்டு களாகத் சின்னத்திரை மூல மும் தன்னுடைய நடிப்பாற் றலை வெளிப்படுத்தி வந் தார். தமிழ்நாடு அரசின் கலை மாமணி, கலைச் செல்வம் உட்பட பல்வேறு விருதுக ளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் எஸ்.என். லட்சுமி கீழே தவறி விழுந்து இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டார். வடபழனியில் உள்ள தனி யார் மருத்துவமனயில் இரு தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 84. எஸ்.என்.லட்சுமிக்கு திருமணம் ஆகவில்லை. சாலிகிராமம், சாந்தி காலனி யில் உள்ள வீட்டில் அண் ணன் பேரன்கள் மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்டு இருந் தது. எஸ்.என். லட்சுமி உட லுக்கு நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிர முகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான விருதுநகர் அருகே உள்ள சென்னகுடிக்கு கொண்டு செல்லப்படுகி றது. அங்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது. எஸ்.என். லட்சுமியை இழந்து வாடும் அரவது குடும் பத்தாருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரி வித்துள்ளார்.

Leave A Reply