தஞ்சாவூர், பிப். 20- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று (பிப் ரவரி 20) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.பாஸ்கரன் வழங்கினார். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர் களுக்கும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் தனராஜ், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பரமசிவம், மாவட்ட வழங் கல் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட சமூக நல அலு வலர் ஜெயராணி, வட்டாட் சியர் (சமூக பாதுகாப்பு) ஆர்.காமராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அலு வலர்கள் கலந்து கொண் டனர்.

Leave A Reply

%d bloggers like this: