திருவாரூர், பிப். 20- இளம்பிள்ளை வாதம் என்னும் கொடிய போலியோ நோயை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் ஆண்டுக்கு இரண்டு முறை, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்ட மாக கடந்த ஞாயிற்றுக்கிழ மையன்று திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், குழந் தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கி முகாமினை மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டத் தில் ஊரகப் பகுதிகளில் 807 முகாம்களும் நகர்ப் புறத்தில் 37 முகாம்களுமாக மொத் தம் 844 முகாம்கள் அமைக் கப்பட்டன. அரசு மருத்துவ மனைகள், சத்துணவு மையங் கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலை யங்கள், பேருந்து நிலையங் கள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணி கள் நடை பெறும் இடங் கள் ஆகிய வற்றில் முகாம் கள் அமைக் கப்பட்டு இருந் தன. போக்கு வரத்து வசதி இல்லாத இடத்தில் நட மாடும் குழுக் கள் மூலமும் சொட்டு மருந்து வழங்கப் பட்டது. பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், தன் னார்வக் குழுக்கள், சேவை அமைப்புகள் ஆகியவற்றின் 3 ஆயிரத்து 376 பணியா ளர்களும் 112 மேற்பார்வை யாளர்களும் மாவட்ட அள வில் 5 மேற்பார்வையாளர் களும் வட்டார அளவில் 10 கண்காணிப்பாளர்களும் இந்த பணியில் ஈடுபட்ட னர். நெறிகுறவர்கள், செங் கல்சூளைத் தொழிலாளர் கள், கட்டுமானத் தொழி லாளர்கள், சாலை தொழி லாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு, வாத்து மேய்ப்பவர்கள், பிற மாநில தொழிலாளர்கள் ஆகியோர் அடிக்கடி இடம் பெயர்ந்து பணிசெய்யக் கூடியவர்கள் என்பதால் 56 அரசுத்துறை நடமாடும் வாகனக் குழுக்கள் மூலம் சொட்டுமருந்து அளிக்கும் பணி நடைபெற்றது. இப் பணியின் மூலம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்து 1 லட்சத்து 10 ஆயிரம் குழந் தைகள் பயன் அடைந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார்.

Leave A Reply

%d bloggers like this: