தமிழகத்தில் திருமண உதவித் திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம், 59 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள் ளதாக செய்திகள் வெளியா கியுள்ளன. இத்திட்டம் பொதுவாக சமூக நலத் துறையால் செயல்படுத்தப் பட்டாலும், மாற்றுத்திற னாளிகளுக்கு மட்டும் அத் துறையின் மூலம் வழங்கப் படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டன. இந்த அரசாணை எண் 23-ன்படி, ஏழை மாற்றுத் திறனாளி பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை யுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப் படும் என்றும், பட்டம் மற் றும் பட்டயம் முடித்த மாற் றுத்திறனாளி பெண்களுக்கு உதவித்தொகையாக ரூ. 50 ஆயிரம் வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டது. மாற்று அரசாணை எண் 24ன்படி, மாற்றுத்திற னாளிகளை திருமணம் செய்ய முன்வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பட்டம் மற்றும் பட்டயம் முடித்த மற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்குவதாகவும் தெரி விக்கப்பட்டது. இத்திட் டங்கள் கடந்த ஆண்டே சென்னை தலைமைச் செய லகத்தில் முதலமைச்சரால் துவக்கி வைத்து ஒரு சில மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன டைய நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மாநி லம் முழுவதும் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையில் பதிந்து வைத்துள்ளனர். இவர்களில் ஒருவருக்குகூட இதுவரை நிதி உதவியும் திருமாங்கல்யமும் வழங்கப் படவில்லை. சமூக நலத்துறை மூலம் இதுவரை 59 ஆயிரத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள் ளது என்கிறபோது, மாற் றுத்திறனாளிகளுக்கு மட் டும் வழங்காமல் ஏமாற்று வது ஏன்? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண் டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. சமூக நலத்துறையின் மூலம் பயன்பெறலாம் என்று மாற்றுத்திறனாளி கள் அத்துறையில் விண்ண பிக்கச் சென்றால், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் தான் விண்ணப்பிக்க வேண் டும், அங்குதான் நிதி உதவி வழங்குவார்கள் என்று அலைக்கழிக்கப்படுகிறார் கள். இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இதுவரை நிதி ஒதுக் கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு போதுமான நிதி யை ஒதுக்கி, விண்ணப்பம் செய்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனா ளிகளையும் அலைக்கழிக் காமல், நிதி உதவி வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சங்கத்தின் மாநில நிர் வாகிகள் பா. ஜான்சிராணி, தே. லட்சுமணன், எஸ். நம்பு ராஜன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.