திருச்சிராப்பள்ளி, பிப்.20- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருச்சி மாந கர போராட்ட ஆயத்த பேரவை சங்கிலியாண்ட புரம் எஸ்.ஜே.திருமண மஹாலில் ஞாயிறன்று மாலை நடைபெற்றது. பேரவைக்கு மாநகரத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநக ரச் செயலாளர் சி.சந்திர பிரகாஷ் பேரவையைத் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், மாவட்டச் செயலாளர் ஏ.சசிக்குமார், மாவட்டத் தலைவர் லெனின் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். அரசு காலிப்பணியிடங் களை உடனே நிரப்ப வேண் டும், தமிழ்நாடு முழுவதும் நிலவும் மின்பற்றாக்குறை யை போர்க்கால அடிப் படையில் நிவர்த்தி செய்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த உடனடியாக ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும், மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், புதி தாக அரசுதொழிற்சாலை கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பகத் சிங் நினைவு நாளான மார்ச் 23ம்தேதி திருச்சி மாநகரத் தில் 25 இடங்களில் நூதனப் போரட்டம் நடத்துவது என பேரவையில் முடிவு செய்யப்பட்டது. நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: