புதுக்கோட்டை, பிப்.20- புதுக்கோட்டை மாவட்ட எல்லை யான திருமயத்தில் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.வீரையா தலைமை யில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. நமனசமுத்திரத்தில் தியாகி சண்முகம் நினைவுத் திடலில் பஞ் சாலை தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.ரெங்கையா தலைமையில் சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை போக்குவரத்து இடைக்கமிட்டி சார்பாக போக்கு வரத்து ஊழியர் சங்கப் பொதுச் செய லாளர் கே.முகமதலிஜின்னா தலை மையிலும், புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நகரச்செயலாளர் சி. அன்புமணவாளன் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது வம்பன் நால்ரோட்டில் ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.செந்தமிழ்செல்வன் தலைமையிலும், ஆலங்குடியில் நகரச் செயலாளர் எஸ்.ரகுநாதன் தலைமை யிலும், வடகாட்டில் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் க.சிவக்குமார் தலைமையிலும், ஆவணம் கைகாட் டியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி தலைமையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட் சியின் மாவட்டச் செயலாளர் எம். சின்னத்துரை, செயற்குழு உறுப்பினர் கள் எம்.செபஸ்தியான், எம்.முத்து ராமலிங்கம், எஸ்.சங்கர், என்.பொன்னி, எம்.உடையப்பன், எஸ்.பொன்னுச் சாமி, வி.துரைச்சந்திரன், ஏ.ஸ்ரீதர் மற் றும் ப.சண்முகம், சண்முகபழனியப் பன், எம்.ஜியாவுதீன், ஜீவானந்தம், மிசா.மாரிமுத்து, ஏ.பாலசுப்பிரமணி யன், டி.சலோமி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: