அரசின் குடிமைப்பொருள் குடோன்களில் இருந்து லாரிகளில் ரேசன்கடைகளுக்கு எடுத்துச்செல்லப்படும் அரிசி, ரோடு முழு வதும் சிந்திக்கிடப்பதை அன்றாடம் காண்கி றோம். ஆனால், அரைப்படி நெல் கூலி அதிகம் கேட்டதற்காக 44 பேரை உயிரோடு எரித்து, நிலப்பிரபுத்துவத்தின் திமிர் அதிகம் என நிரூபித்தது வெண்மணி சம்பவம். ஒரு குக்கிராமத்தில் நடத்தப்பட்ட நரவேட்டை உலகச்சரித்திரமாகிப் போனது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற பெயருக்குப் பின்னால் வெண்மணி தியாகிகளின் பெயர்கள் மறைந்து கிடக்கிறது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பண் ணையடிமை முறை முழுமையாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைகளிலும் கீழாக நடத்தப்பட்டனர். ஆண்டைகளின் அவச் சொல்லுக்கு ஆளாகாமல் வேலை செய்ய பணிக்கப்பட்ட பண்ணையடிமைகளின் கூனைநிமிர்த்தி, கக்கத்தில் இருந்து கையை உயர்த்தி, யாருக்கும் நாங்கள் அடிமையில்லை; உழைப்புக்கு ஏற்ற கூலியை வழங்கு என முழங்க வைத்த பி.சீனிவாசராவ் என்ற மகத்தான தலைவரின் பின் செங்கொடி ஏந்தி ஆர்ப்பரித்த உழைக்கும் வர்க்கத்தின் வரலாற் றில் பதித்த ரத்தசிவப்புதான் வெண்மணி. கடந்த 1952 ஆம் ஆண்டு தஞ்சாவூர் பண் ணையாள் பாதுகாப்புச் சட்டம் என்று தஞ் சைக்கு மட்டும் அமலாக்கக் கூடிய ஒரு சட் டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த இராஜாஜி, ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்ற பேய்பிடித்து ஆட்டுகிறது. அந்தப் பேயிடமிருந்து விடுவிக்கத்தான் இந்த சட்டம்’ என்று பேசினார். அச்சட்டம் அம லுக்கு வந்தவுடன் பண்ணையாள் முறை ஒழிந்து, தினக்கூலித் தொழிலாளர் முறை வரு கிறது. எட்டுமணி நேரம் வேலை நேரத்தை நிர்ணயம் செய்கிற கோரிக்கை விவசாயிக ளிடம் வலுக்கிறது. அடிமைகளாய் இரவு, பகல் பாராமல் உழைத்தவர்கள் இனி குறிப் பிட்ட மணிநேரம் தான் உழைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததால் கொதித்தார் கள் நிலவுடைமையாளர்கள். செங்கொடியின் தலைமையிலான விவசாய கூலித்தொழி லாளர் சங்கம் அமைப்பதற்கு எதிராக “உணவு உற்பத்தியாளர் சங்கம்“ என்ற பெயரில் முத லாளிமார்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் வைக்கிறார்கள் . முதலில் “உணவு உற் பத்தியாளர் சங்கம்” என்றும் பின்பு “நெல் உற் பத்தியாளர் சங்கம்” என்று பெயரை மாற்றி வைக் கிறார்கள். இப்போராட்டத்திற்கு கம்யூ னிஸ்டுகளைத் தவிர பிற கட்சிகள் எல்லாமே நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கு ஆதர வாகவே இருந்தன. ‘உள்ளூரில் வேலைக்கு ஆள் இருக்கும் போது வெளியூர் ஆட்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது’ என்பது அரசின் ஆணை யாகும். ஆனால், ஆண்டைகள் அதை மீறு கிறார்கள். அரசும், காவல்துறையும் அதைக் கண்டுகொள்ளாமல் ஆதரித்தன. உள்ளூர்த் தொழிலாளர்களுக்குக் கூலியாக நெல் அளந்து போட்டவர்கள், வெளியூர்த் தொழி லாளர்களுக்கு அரிசி அளந்து போட்டார்கள். அவர்களைத் தடுப்பதற்காக, நிலத்திற்கு நியாயம் கேட்கச் சென்ற உள்ளூர் கூலித் தொழிலாளர்களை குண்டர்களைக் கொண்டு விரட்டியடித்தனர். பாதுகாப்புத் தரவேண்டிய காவல்துறை, துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் பக்கிரி என்ற கூலித் தொழிலாளி படு கொலை செய்யப்படுகிறார். பரமக்குடிக்கு முன்பே தஞ்சையில் தலித்துகளை நோக்கித் தோட்டாக்கள் முதலில் பறந்துள்ளது. அப்படுகொலை நடந்த சில நாட்கள் கழித்து மன்னார்குடியில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது. நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்குப் புதிய தலைவராக இருஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் பொறுப்பேற்கிறார். தமிழகத் தில் தஞ்சையில் மட்டுமே உருவாகியிருந்த நெல் உற்பத்தியாளர் சங்கம், தாழ்த்தப்பட்டோர் குடிசைகளைக் கொளுத்தும்படியான சம்ப வங்களை உருவாக்குகிறது. இன்னொரு புறம் நிலப்பிரபுக்களும், காவல்துறையும் சேர்ந்து சட்டரீதியான தாக்குதல்களைத் தொடுத்தனர். விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போனதால், முக்கிய ஊழியர்களின் உயிருக்கு நெல் உற்பத்தியாளர் சங்கம் குறிவைக்கிறது. தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு, பூழந்தாங்குடி பக்கிரி, ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மணலூர் மனோன் மணியம்மை உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டக்களத்தில் முன்நிற்கின்றனர். இவர்கள் தலைக்கு அன்றைய அரசு விலை பேசுகிறது. தோழர்கள் ஏ.கே.கோபாலன், மணலி கந்த சாமி, பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராசுதாரர் ஒருவர் முயற்சி எடுத் தார்.அவரின் முயற்சியை தடுக்க மேற் கொண்ட நடவடிக்கை செம்பாளூர் வழக்காக மாற்றப்பட்டது. அந்த வழக்கில் வெ.அ.சுப் பையன், எஸ்.ஏ.முருகையன், டி.காசிநாதன், வாட்டாக்குடி இரணியன்,ஆறுமுகம் உள் ளிட்ட பலர் குற்றம்சாட்டப்படுகின்றனர். காவல்துறை தேடுதல் வேட்டையில் வாட் டாக்குடி இரணியனும்,ஆறுமுகமும் வடசேரி என்ற இடத்தில் கைக்கூலி ஒருவன் காட் டிக்கொடுக்கப்பட்டதால் அகப்பட்டுக் கொண்டனர். 5.5.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து வாட் டாக்குடி இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள். அப்படியும் தலைவர்களைக் காட்டிக் கொடுக்க மறுத்த ஆறுமுகத்தையும் சுட்டு வீழ்த்துகின்றனர். தியாகிகள் விதைக்கப்படும் பணி தஞ்சை முழுவதும் தீவிரமாகியது. அடுத்து இருஞ்சியூரில் சின்னப்பிள்ளை என்பவர் கடத்திக் கொலை செய்யப்படுகிறார். அதற்கடுத்து ராமச்சந்திரன் என்பவர் கொல் லப்படுகிறார். 1968 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று சின்னப்பிள்ளை, ராமச்சந்திரன் ஆகியோர் படுகொலையைக் கண்டித்து நாகையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடை பெறுகிறது. அதேநாளில் நெல் உற்பத்தியாளர் சங்கம் சிக்கலில் ஒரு அவசரக் கூட்டம் நடத்துகிறது. விவசாயத் தொழிலாளர்கள் நாகையில் கூட்டம் முடித்து திரும்பும் போது, சிக்கல் பக்கிரிசாமி என்பவர் படுகொலை செய் யப்படுகிறார். 30.11.1968ல் நெல் உற்பத்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் ஒன் றில் கீழ்வெண்மணிச் சேரியைத் தீ வைத்து கொளுத்தப் போவதாக பகிரங்க மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதையறிந்த அப்பகுதிவாழ் மக்கள் கிரா மத்தைப் பாதுகாக்கும் வண்ணம் மூன்று நாட்கள் இரவு பகலாக செங்கொடியை ஏந்திய படி தீவிரப் பாதுகாப்பில் இருக்கிறார்கள். வெண்மணி கிராமத்தின் தலைவரான முத்துச் சாமியை தங்கள் சங்கத்தில் சேருமாறு மிரட்டு கிறார்கள். அவர் மறுக்கவும் ஒருவர் வீட்டில் வைத்துப் பூட்டி விடுகின்றனர். இதையறிந்த வெண்மணி கிராமத்தார் சிலர், முத்துச் சாமியை மீட்கின்றனர். தங்கள் வீட்டின் பூட்டை உடைத்து சேரியைச் சேர்ந்தவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதா என கொதித்த ஆண்டைகளின் கூட்டம் ஒன்று சேர்கிறது. 25.12.1968 அடியாட்களால் துப்பாக்கி, தீப்பந்தம் போன்றவைகளுடன் வெண்மணி கிராமம் சுற்றி வளைக்கப்படுகிறது. எல்லாக் குடிசைகளுக்கும் தீவைத்துக் கொண்டே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஊருக்குள் வருகிறார்கள். மக்கள் பல திசைகளில் பதறித் தெறித்து ஓடுகிறார்கள். இருட்டு வேளையான தால் தப்பிக்க வழி தெரிய வில்லை. வழி தெரி யாத சிலர் உடனே தப்பிக்க வேண்டி அங்கிருந்த ராமையா என்பவரின் ஒரு சிறிய குடிசை வீட் டுக்குள் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறார்கள். இதைக் கவனித்து விட்ட வெறிக்கும்பல் அந்தக் குடிசை வீட்டை வெளியில் சாத்தி விட்டு நெருப்பு வைத்து விடுகிறார்கள். மஞ்சள்கொடி பிடிக்க மாட்டோம், செங் கொடிதான் பிடிப்போம் என வீர முழக்கமிட்ட சுந்தரம், சரோஜா, மாதாம்பாள், தங்கையன், பாப்பா, சந்திரா, ஆசைத்தம்பி, வாசுகி, சின் னப்பிள்ளை, கருணாநிதி, வாசுகி, குஞ் சம்பாள், பூமயில், கருப்பாயி, ராஞ்சியம்மாள், தாமோதரன், ஜெயம், கனகம்மாள், ராஜேந் திரன், சுப்பன், குப்பம்மாள், பாக்கியம், ஜோதி, ரத்தினம், குருசாமி, நடராசன், வீரம்மாள், பட்டு, சண்முகம், முருகன், ஆச்சியம்மாள், நட ராஜன், ஜெயம், செல்வி, கருப்பாயி, சேது, நட ராசன், அஞ்சலை, ஆண்டாள், சீனிவாசன், காவிரி, வேதவள்ளி, குணசேகரன், ராணி ஆகிய 44 பேர் செந்தணலில் வெந்து மடிந் தனர். அவர்களின் நினைவிடத்தில் ஒவ் வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி லட்சக் கணக்கானோர் திரண்டு வர்க்கப்போராளி களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்தியாகிகளின் பூமியாம் நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு பிப்ரவரி 22 ம் தேதி துவங்கி 25 ம் தேதி வரை நடைபெறுகிறது. உழைக்கும் மக் களுக்கு சாணிப்பாலும், சவுக்கடியும் பரி சாக வழங்கிய ஆண்டைகளின் கொட்டத்தை ஒடுக்கிய டெல்டா மாவட்டமான நாகையில் பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் லட்சக்கணக் கானோர் பங்கேற்கும் மாநில மாநாட்டு பேர ணியில் சங்கமிப்போம். சரித்திரத்தின் புத்தி ரர்கள் நாம் என்பதை நிரூபிப்போம்.

Leave A Reply

%d bloggers like this: