விழுப்புரம்,பிப்.20- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில 20 வது மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரை எழுச்சியுடன் நாகப்பட்டி னத்தில் நடைபெற உள்ளது. இந்த மநாட்டையொட்டி சேலத்தில் கொண்டு வரப் படும் தியாகிகளின் நினைவு ஜோதி பயணத்திற்கு ஞாயி றன்று(பிப்.19) விழுப்புரம் மாவட்ட எல்லையான வி. கூட்டுச் சாலையில் மேள தாளத்துடன், அதிர்வேட்டு கள் முழுங்க செங்கொடி ஏந்திய தோழர்களுடன் வட்டக்குழு உறுப்பினர் ஆர்.அர்ச்சுனன் தலைமை யில் எழுச்சியுடன் உற்சாக மாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர், சின்னசேலத் தில் வட்டக்குழு உறுப்பி னர் பி.பழனி தலைமையி லும், கள்ளக்குறிச்சியில் வட்டசெயலாளர் ஏ.நடேசன் தலைமையிலும் வரவேற்ற னர். பிப்ரவரி20 திங்களன்று தியா கதுருகத்தில் வட்டக் குழு உறுப்பினர் ஆர்.செல் வராசு தலைமையிலும், எல வாண சூர்கோட்டையில் ஒன்றிய கவுன்சிலர் ரகு ராமன் தலைமையிலும், உளுந்தூர்பேட்டையில் ஒன் றிய செயலாளர் எம்.ஆறு முகம் தலைமையிலும் செங்கொடி ஏந்தி தோழர் கள் உற்சாகத்துடன் வர வேற்பு கொடுத்தனர். பிறகு, உளுந்தூர்பேட்டை வழியாக கடலூர் மாவட்ட எல்லையான மங் கலம்பேட்டைக்கு சென்ற னர். அங்கு கடலூர் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஜி. ஆனந்தன், மூசா தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேக ரன் கொண்டு வந்த ஜோதி, விழுப்புரம் மாவட்ட எல்லையில் விக் கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினரு மான ஆர். ராமமூர்த்தியிடம் வழங்கப் பட்டது. சேலம் மாவட்ட செய லாளர் டி.தங்கவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாச்சலம், மாவட் டக்குழு உறுப்பினர் சேகர், விழுப்புரம் மாவட்ட செய லாளர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகவன், பி. சுப்பிரமணியன், பி.குமார், கே.எம்ஜெயராமன், டி.எம். ஜெயசங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, வட்டச் செயலாளர் கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். அனைத்து மையங்களி லும் சேலம் மாங்குயில் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: