நாகப்பட்டினம், பிப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு நாகப்பட்டி னத்தில் வெண்மணி நகர், தோழர் ஜோதிபாசு அரங்கத் தில் (லலிதா மகால்) பிப்ரவரி 22 புதன்கிழமை கோலாகலமாகத் துவங்குகிறது. மகத்தான இந்த மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரை 4 நாட்கள் உற்சாகப் பேரெழுச்சியோடு நடைபெறு கிறது. பிப்ரவரி – 25 பிற்பகல் 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம் மாண்டப் பேரணியும் மாபெ ரும் பொதுக்கூட்டமும் நடை பெறுகின்றன. கொடியேற்றம் – – சேர்ந்திசை பிப்ரவரி 22 காலை 9 மணிக்கு, நாகை அபிராமி அம் மன் திருவாசல் முன்பு, 20வது மாநாட்டைக் குறிக்கும் வண் ணம் 20 செங்கொடிகளைத் தலைவர்கள் ஏற்றுகிறார்கள். அப்போது சென்னை ‘பீட்’ இசைக்குழுவினரின் சேர்ந் திசைப் பாடல்கள் எழுச்சியு டன் ஒலிக்கும். பொது மாநாடு தொடர்ந்து தோழர் ஜோதி பாசு அரங்கத்தில் (லலிதா மகா லில்) பொது மாநாடு துவங்கு கிறது. தோழர் லீலாவதி நினை வுக் கொடியை மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக்கொள்கிறார். வெண் மணி தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் கோ. வீரய்யன் பெறுகிறார். சேலம் சிறைத் தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் ஏ.அப்துல் வஹாப் பெறுகிறார். மத்தியக் குழு உறுப்பினர் ஆர். உமாநாத் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தப் படுகிறது. இதைத்தொடர்ந்து தலைமைக்குழு தேர்வு நடை பெறுகிறது. மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் எம்.எல்.ஏ, அஞ்சலி தீர் மானம் முன் மொழிகிறார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், மாநிலக்குழு உறுப் பினருமான வி.மாரிமுத்து வர வேற்புரை ஆற்றுகிறார். கட்சி யின் பொதுச் செயலாளர் பிர காஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்று கிறார். சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் நூல் வெளியிடுகிறார். தொடர்ந்து மூத்த தோழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதிநிதிகள் மாநாடு அன்று மதியம், 12 மணிக்கு மாநாட்டுக்குழுக்கள் தேர்வு நடைபெறுகிறது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பிக்கிறார். இதைத்தொடர்ந்து பிப்ர வரி 22 மாலை 5 மணி முதல் பிப் ரவரி 25 பிற்பகல் 2 மணி வரை பிரதிநிதிகள் விவாதம் – நடை பெறுகிறது. இதைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் தொகுப் புரை வழங்குகிறார். பின்னர் புதிய மாநிலக்குழுத் தேர்வும், – அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் தேர்வும் நடை பெறுகின்றன. பிரதிநிதிகள் மாநாட்டின் நிறைவாக அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எஸ். ராமச் சந்திரன் பிள்ளை, கே.வரத ராசன், பிருந்தா காரத், பி.வி.ராக வலு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். பொதுச் செயலாளர் பிர காஷ் காரத் நிறைவுரை ஆற்று கிறார். வரவேற்புக்குழுச் செயலாள ரும் நாகை மாவட்டச் செய லாளருமான ஏ.வி.முருகையன் நன்றியுரை ஆற்றுகிறார். பிரம்மாண்டப் பேரணி மாநாட்டில் நிறைவாக 5000 செந்தொண்டர்கள், அகில இந்திய – மாநிலத் தலைவர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள், இயக் கத் தோழர்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணி பிப்ரவரி 25 பிற்பகல் 3 மணிக்கு புத்தூர் அண்ணா சிலையில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் புறப்படு கிறது. பொதுக்கூட்டம் அன்று மாலை 5 மணிக்கு பி.சீனிவாசராவ் திடலில் (வலி வலம் தேசிகர் பாலிடெக்னிக் திடல்) மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. முன் னதாக, கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பொதுக்கூட்டத்திற்கு நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை ஏற் கிறார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். பொதுச்செய லாளர் பிரகாஷ் காரத் சிறப் புரை ஆற்றுகிறார். மத்தியக் கட் டுப்பாட்டுக் குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத், அர சியல் தலைமைக்குழு உறுப் பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரங்க ராஜன் எம்.பி., உ.வாசுகி, முது பெரும் தலைவர் கோ.வீரய்யன், மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் அ.சவுந்தரராசன் எம். எல்.ஏ., கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் எழுச்சி யுரை ஆற்றுகிறார்கள். மாநாட்டு வரவேற்புக்குழுப் பொருளாளர் நாகைமாலி எம்.எல்.ஏ. நன்றியுரை ஆற்று கிறார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின் றன.

Leave A Reply