ரயில்வேயின் நிதிநிலை அறிக்கை (2012-2013) மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நேரத்தில் தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களின் இன்றைய கதி என்ன என்று பார்ப்பது நல்லது. தமிழகத்தின் புதிய பாதை திட் டங்கள், அகலப்பாதை திட்டங்கள், ரெட்டைப் பாதை திட்டங்கள் எப் போது ஒப்புதல் அளிக்கப்பட்டன? திட்ட மதிப்பீடு என்ன? இதுவரை எவ்வளவு செலவானது? இன்னும் எவ் வளவு பாக்கி ஒதுக்கவேண்டும் என் பதை ஒரு அட்டவணையாக பாருங்கள். 1996-97, 2006-07 ஆண்டுகளில் ஒப் புதலளிக்கப்பட்ட புதிய பாதை திட் டங்களே இன்னும் முடியவில்லை என் பதை அட்டவணையில் பார்க்க லாம். 1996-97ல் தொடங்கப்பட்ட கரூர் – சேலம் லைன் நாமக்கல்லோடு நிற்கிறது. திட்டமதிப்பும் பன்மடங் கும் உயர்ந்துவிட்டது. மகாபலிபுரம் வழியாக சென்னையிலிருந்து கடலூ ருக்கு புது வழியும் அப்படியே கிடப் பில் கிடக்கிறது. மொத்தத்தில் ரூ.3542 கோடி பிடிக்கும் இத்திட்டங்களுக்கு இதுவரை 677 கோடிதான் செல விடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.181 கோடிதான் ஒதுக்கப்பட்டது. திட்டம் முடிய இன்னும் ரூ.2722 கோடி தேவைப்படுகிறது. திண்டி வனம்-நகரி, சத்தியமங்கலம்-பெங்க ளூரு திட்டங்கள் தொங்கலில் உள் ளன. இவையெல்லாம் எப்போது முடிவடைவது என்பது கேள்விக் குறிதான். அதற்குள் திட்டமதிப்பீடு மேலும் கூடிவிடும். இந்த ஆண்டு கூடு தல் நிதி ஒதுக்க தமிழகம் குரல் கொடுக்கவேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: