சென்னை, பிப்.20- தமிழகத்தில் ஆட்சி மாற் றம் ஏற்பட்டு 10 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலை யிலும் சட்டம் – ஒழுங்கு நிலைமையில் எவ்வித முன் னேற்றமும் ஏற்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் புதனன்று (பிப்.22) தொடங்கி 25ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி திங்க ளன்று (பிப்.20) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பரமக்குடியில் தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு, திருக்கோவிலூர் அருகில் பழங்குடியினப் பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத் தப்பட்டது, தொடரும் காவல் நிலைய மரணங்கள் போன்ற நிகழ்வுகள், தமிழகத்தில் சட் டம் – ஒழுங்கு நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே காட்டுகின்றன,” என்று கூறினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதரா ஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோரும் செய்தி யாளர் சந்திப்பில் பங்கேற்றனர். “கடந்த 20 ஆண்டுகளாக மத்திய ஆட்சியாளர்கள் செயல் படுத்தி வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நாடுமுழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள் ளன. சில்லரை விற்பனையில் அந்நிய நிறுவனங்களை நேரடி யாக அனுமதிப்பது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய நீர் கொள்கை, நாட்டின் நீர் வளத்தை பன்னாட்டு நிறு வனங்களிடம் ஒப்படைப்பதாக உள்ளது. இத்தகைய கொள்கை களை எதிர்த்து பிப்ரவரி 28 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத் திய தொழிற்சங்கங்கள் அறை கூவல் விடுத்துள்ள நிலை யில், தொழிலாளர் சட்டங் களை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று பிரத மரே பேசுகிறார். தொழிலாளர் களை தம் விருப்பம்போல் பணி நீக்கம் செய்ய முதலாளி களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்கிறார். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ள திமுக, அதிமுக கட்சிகளும் இதே கொள்கைகளைத்தான் செயல்படுத்தின. இதன் விளைவாக ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழகத் தின் பங்கு 2 விழுக்காடு சரி வடைந்திருக்கிறது. விவசாயத் தில் ஒரு விழுக்காடு எதிர் மறை வளர்ச்சி ஏற்பட்டிருக் கிறது” என்றார் ஜி.ராமகிருஷ் ணன். மின்வெட்டுக்குக் காரணம் தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கேற்ப உற்பத்தியைப் பெருக்குகிற திட்டங்கள் 2001 முதல் 2006 வரை ஆட்சியி லிருந்த அதிமுக அரசாலும், 2006 முதல் 2011 வரை ஆட்சி யிலிருந்த திமுக அரசாலும், இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசாலும் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் செய்த தவறுக்கு மின் வாரியத்தின் மூலம் கட்டணங் களை உயர்த்தி, மக்களுக்கு தண்டனை அளிக்க முயல் வதை ஏற்க முடியாது. தனியாரிடம் இருந்து ரூ.11 விலை கொடுத்து வாங்கப் படும் மின்சாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட் டுப் பெரு நிறுவனங்களுக்கும் ரூ.4.50 கட்டணத்தில் வழங் கப்படுகிறது. இதனால் அர சுக்கு ஏற்படும் இழப்பு ரூ.9,000 கோடி. அதேபோல் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்திற்காக மின் வாரி யத்திற்கு அரசு தரவேண்டிய மானியம் ரூ.9,000 கோடி வரை யில் இன்னும் வழங்கப்பட வில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். கல்வித்துறை நெருக்கடி தமிழகத்தில் கல்வித் துறை பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பல தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன. தனியார் சுய நிதி தொழிற்கல்லூரிகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. இது மிகப்பெரிய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு இட்டுச் செல்கிறது. 51 விழுக் காட்டினர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ள, தலித், பழங்குடி குடும்பங் களைச் சேர்ந்த மாணவர் களால் எப்படி லட்சக்கணக் கில் கட்டணம் செலுத்திப் படிக்க முடியும்? மிகப் பெரும் பாலோர் நிலமற்றவர்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக வும் பிற்படுத்தப்பட்ட சமூகங் களைச் சேர்ந்த மாணவர் களாலும் எப்படி இவ்வளவு பெரும் தொகையை செலுத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் அரசு நிர்ண யித்ததைவிட கூடுதல் கட்ட ணம் வசூலிக்கும் பள்ளிகளின் உரிமங்களை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக் குவதில், அடித்தட்டு குழந்தை களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான தெளிவான வரையறுப்புகள் வெளியிடப் பட்டு, வெளிப்படையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். மாநிலத்தில் நகரங்களி லும் கிராமங்களிலும் பல வடி வங்களில் தீண்டாமைக் கொடுமை தொடர்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வித ஆக்கபூர்வ நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. அடிப்படையான நிலச் சீர் திருத்தத்திற்கான உச்சவரம் புச் சட்டம் தளர்த்தப்பட்டதே யன்றி, கறாராக அமலாக்கப்பட வில்லை என்று அவர் விமர்சித் தார். திருப்பப்படும் தென்பெண்ணாறு தென்பெண்ணாறு நீரை கர் நாடகத்தின் ஒரத்தூர் பகுதி யில் தடுத்து 160 ஏரிகளுக்கு திருப்பி விடுவதால் தமிழகத் தில் கிருஷ்ணகிரி, திருவண் ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள் ளது. இதில் மத்திய-மாநில அர சுகள் உடனடியாகத் தலை யிட்டு தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கூடங்குளம் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து கருத்துக் கூறிய அவர், “ஜப்பானில் ஏற் பட்ட புகுஷிமா சுனாமி தாக்கு தலுக்குபிறகு அணுமின் பாது காப்பு குறித்த அச்சம் மக்க ளுக்கு ஏற்பட்டது. மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு, கூடங்குளம் நிலையத்தில் பாதுகாப்பிற்கு எவ்வித அச்ச மும் இல்லை என்று கூறியுள் ளது. தமிழக அரசு நியமித்த குழுவும் தனது அறிக்கையை அரசிடம் அளிக்க இருக்கிறது. மத்திய – மாநில அரசுகள் அந்த அறிக்கையைப் பெற்று ஆய்வு செய்து, அங்கு மின் உற்பத்தி யை தொடங்குவதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றார். கூடங்குளம் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் வாழ் வாதாரத்திற்காக ரூ.200 கோடி யில் திட்டங்களை தொடங்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ள ஆலோச னையையும் அரசுகள் செயல் படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். சசிகலா விவகாரம் சசிகலா குடும்பத்தினர் கைது போன்ற நடவடிக்கை கள் குறித்து கேட்கப்பட்ட போது, “சசிகலா குடும்பத்தி னர் அரசு நிர்வாகத்திலும் தலையிட்டதாகக் கூறப்படுவ தால் இது உட்கட்சி பிரச்ச னை மட்டும் அல்ல. எனவே இதுகுறித்து தமிழக மக்க ளுக்கு விளக்கம் அளிக்கிற பொறுப்பு அதிமுக அரசுக்கு உள்ளது,” என்றார். தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை பற்றிய கேள்விக்கு அவர், நாட்டு மக்களின் பாது காப்பு முக்கியம்; அதே நேரத் தில் மாநிலங்களின் உரிமை களில் கைவைப்பதாக மாறி விடக்கூடாது என்றார். சங்கரன்கோவில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பான ஒரு கேள் விக்கு பதிலளித்த அவர், நாகையில் மாநாட்டையொட்டி கூடுகிற கட்சியின் மாநில செயற்குழு இதுகுறித்து முடிவு செய்யும் என்றார். இத்தகைய சூழலில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கூடுகிறது. மாநில அளவில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக் கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: