தஞ்சாவூர், பிப். 20- தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பிரகன் நாட் டியாஞ்சலி துவங்கியது. இவ்விழா வரும் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ளது. விழாவில் தில்லி சங்கீத் நாட்டிய அகாடமி மற்றும் தஞ்சாவூர் மரபுவழி நிகழ்த் துக் கலை மையம் ஆகிய வற்றின் உதவியுடன் கதக், மோகினி ஆட்டம், ஒடிசி, சத்தீரியா, கதகளி, மணிப்புரி ஆகிய நடனங்கள் இடம் பெறுகின்றன. தில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூர், கொச்சி, புனே, அசாம், மணிப்பூர், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட கலை ஞர்கள் கலந்து கொள்கின் றனர். மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து நடனக் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை பிரகன் நாட் டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் மருத்துவர் வி.வர தராஜன் தலைமையில் செயலாளர் முத்துக்குமார் மற்றும் என். ராஜா, அறங்காவலர்கள், உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டர்கள் செய்து வரு கின்றனர்.

Leave A Reply