தஞ்சாவூர், பிப். 20- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பொது வேலைநிறுத்த ஆயத்த மாநாடு தஞ்சை டி.பி.எஸ். நகரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ. கோபால்சாமி தலைமை தாங்கினார். இணைச் செய லாளர் செல்வி வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செய லாளர் இரா.பன்னீர்செல்வம் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். மனோகரன் வாழ்த்திப் பேசினார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் இரா.முத்துசுந்தரம் சிறப்புரையாற் றினார். பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழி யர்கள் முழுமையாக பங்கேற்பது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நிறைவாக மாவட்டப் பொருளாளர் ரங்கசாமி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: