தஞ்சாவூர், பிப். 20- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பனை யக்கோட்டை கயிறு தொழிற் சாலை அருகில் உள்ள டாஸ் மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பெண்கள் மனு அளித்தனர். மூர்த்தியம்பாள்புரம் ஊராட்சி கொண்டையார் தெருவில் அரசு மதுபான கடை எண் 8072 இயங்கி வருகிறது. இக்கடை அமைந் துள்ள பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை உள் ளது. பல சமயங்களில் இந்த நிழற்குடையில் அமர்ந்து மது குடிக்கிறார்கள். இது பேருந்திற்காக காத்திருக் கும் பள்ளி, கல்லூரி மாண விகளுக்கு பெரும் அச்சு றுத்தலாக உள்ளது. மேலும், குடிபோதை யில், அருவருக்கத்தக்க வார்த் தைகள் பேசி சண்டையிட் டுக் கொள்வதும், தினமும் வாடிக்கையாக நடந்து வருகிறது. பேருந்திற்காக காத்திருக்கும் பெண்களி டமும், தகராறு செய்கிறார் கள். முக்கியமாக மன்னார் குடி சாலை என்பதால் டாஸ்மாக் கடை அருகில் ஏராளமான விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. எனவே, கிராம மக்களை யும் குறிப்பாக பெண்களை பாதிக்கும் இந்த மதுபான கடையை அகற்றிட கோரி மாவட்ட ஆட்சித் தலைவரி டம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர். இனிமேலும் கடையை அகற்றாவிட்டால் மதுபான கடையை இழுத்து மூடும் போராட்டம் நடத்துவோம் என்றும் செய்தியாளர்களி டம் அவர்கள் தெரிவித் தனர்.

Leave A Reply

%d bloggers like this: