ஹைதராபாத் ஹாசன் சாகர் ஏரியில் நடைபெற்று வரும் 31 வது தேசிய துடுப்பு படகு சாம்பியன் போட்டி களின் 500 மீ லகு எடை ஆடவர் டபுள் ஸ்கல் போட் டியில் ஆந்திராவின் எஸ். எஸ்.டான்கி-சசிகுமார் இணை தங்கம் வென்றது. சீனியர் தேசிய படகு போட்டிகளில் இந்த இணை வெல்லும் முதல் பட்டம் இது. கடந்த நான்காண்டு களாக இங்கு பயிற்சி பெற் றுவரும் இவர்களுக்கு ஹாசன் ஏரி ஒரு பரிச்சய மான ஏரியாகும். இவர்கள் 1:32.10 வினாடிகளில் 500 மீ தொலைவைக் கடந்து தங் கம் வென்றனர். முப்படை யின் விகாஸ் சிங் – விக்ரம்சிங் இணை (1:32.51) வெள்ளி யையும் தில்லியின் அனில் குமார் – கரம்பிர் சிங் இணை (1:33.95) வெண்கலத்தையும் வென்றது. மகளிர் காக்ஸ்லெஸ் இரட்டையர் போட்டியில் 2010 ஆசிய போட்டி வெண் கல இணை பிரதிமா புஹா னாவும் சன்ஜூக்தா டங்டங் கும் (1:48.82) முதலிடத்தைப் பிடித்தனர். கேரளாவின் நித்யா ஜோசப் -அஞ்சலி ராஜ் இணை (1:49.90) இரண் டாம் இடத்தையும் மணிப் பூரின் ஏ.சுர்பாலா தேவி – சுனிதாதேவி இணை (1:58.09) மூன்றாம் இடத்தை யும் கைப்பற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: