ஜுனாகத், பிப். 20 – ஜுனாகத் பவ்நாத் கோவி லில் சிவராத்திரி விழாவில் ஏற்பட்ட நெரிசலில் ஐவர் மாண்டனர். நாற்பதுக்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து உயர் மட்டக்குழு விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செய லாளர் வருண்மரியா தலைமை யில் ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஜுனாகத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூத்த அதி காரியொருவர் கூறினார். நெரி சலில் சிக்கி மரித்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் அளிக்கப்படும் என்று ஜுனாகத் மாநகராட்சி யும் குஜராத் மாநில அரசும் அறிவித்துள்ளன. மகாசிவராத்திரி விழாவை அகில பாரதிய சாதுக்கள் சமாஜ் முன் நின்று நடத்துகின்றது.

Leave A Reply