சர்ச்சைக்குரிய தீவான என்பியோங்கிற்கு அருகில் ராணுவப் பயிற்சியை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தென் கொரிய அரசு. வடகொரிய அரசின் கடுமையான எச் சரிக்கையையும் மீறி இந்தப் பயிற்சியை நடத்தியுள் ளார்கள். அதிலும் உயிர் பறிக்கும் உண்மையான குண்டு கள் மற்றும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு அவர்கள் பயிற்சி நடத்தியுள்ளனர். ஒருநாள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் தென் கொரிய ராணுவத்தின் போர் ஹெலி காப்டர்களும் பயன்படுத்தத்பபட்டன. * * * செனகல் நாட்டில், தற்போதைய அதிபர் அப்துல்லாயே வாடே மீண்டும் தேர்தலில் நிற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலை யில் அந்த ஆர்ப்பாட்டங்களைக் குலைக்க அடக்குமுறை ஏவிவிடப்பட்டிருக்கிறது. ஞாயிறன்று நடந்த ஆர்ப்பாட் டத்தைக் குலைக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்கு தலில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டனர். கடந்த மூன்று வாரங்களில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. * * * அர்ஜெண்டினாவில் இயங்கி வரும் அனைத்து பிரிட்டன் நிறுவனங்களையும் இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அர்ஜெண்டினா முழுவதும் போராட்டங் கள் நடந்து வருகின்றன. மால்வினாஸ்(ஃபாக்லாந்து) தீவு கள் பிரச்சனையில் பிரிட்டனின் அடாவடி நடவடிக்கையைக் கண்டித்தே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பயனோஸ் அயர்சில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மால்வினாசை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும், லத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

Leave A Reply