சிதம்பரம், பிப்.20 – சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி யின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தந்தை போலீ சாரால் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம் பரம் அடுத்த சேத்தியாதோப்பு அருகே உள்ள கீமங்கலம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி(60). இவரது மகள் ஞானவள்ளி (21) சிதம்பரம் அண் ணாமலை பல்கலை.யில் இஞ்சினியரிங் கட்டிடவியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். ஞானவள்ளியும் சேத்தியா தோப்பு அருகே உள்ள ஆணை வாரி கிராமத்தை சேர்ந்த பொறி யாளர் பாலுவும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த சுந்தர மூர்த்தி வேறு இடத்தில் மாப் பிள்ளை பார்த்து வந்தார். இதற் கு ஞான வள்ளி எதிர்ப்பு தெரி வித்து வந்துள் ளார். இந்நிலையில் சிதம்பரம் நடரா ஜர் கோவிலில் பிப்ரவரி 19 ந்தேதி மாலை பெண் பார்க் கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் தார். இதற்கு ஞானவள்ளி கடுமை யான எதிர்ப்பு தெரிவித்து பெண் பார்க்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தார். இதனால் சுந்தரமூர்த்திக்கும் ஞானவள்ளிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வாய் தகராறாக மாறியது. இந்நிலை யிலும் பாலுவைத்தான் திரு மணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறிவிட்டார். பின்னர் வழக்கம் போல் கல் லூரிக்கு வந்த அவர், பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு செல்லும் போது, மிகவும் ஆவேசமாக வந்த சுந்தரமூர்த்தி, ஞான வள் ளியின் அருகில் வந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத் தார். மாணவி வலிதாங்க முடி யாமல் இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து அழுது துடித் தார். இதனை கண்ட மற்ற மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். மாணவியின் அலறலை கண்டு பொதுமக்கள் என்ன ஏதுவென்று தெரியாமல் ஓடினர். தகவல் அறிந்த அண்ணா மலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் இருந்த மாணவியை மீட்டு ராஜாமுத்தையா மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அண்ணா மலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி ஞான வள்ளியை கொலை செய்ய முயற்சி செய்த தந்தையை கைது செய்தனர். பகலில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கௌரவக் கொலையை ராஜஸ்தான், பஞ் சாப், தில்லி ஆகிய மாநிலங் களில் நிலச்சுவான்தார்கள் செய்து வந்தனர் . இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து, இதுபோல் கௌ ரவக்கொலை செய்ப வர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண் டும் என்று தீர்ப்பு அளித்துள் ளது. அப்படி இருந்தும் சில இடங்களில் இதுபோல கொலைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. தற்போது தமிழகத்திலும் இந்த தவறான கலாச்சாரம் பெருகி வருவது மிகவும் வருத் தத்தை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: