ஒவ்வொரு இடைத்தேர்தலின்போதும், ஓர் அரசு இரண்டு மாதம் பதவி விலகி, மீண்டும் ஆட்சி நடத்துவதும் விளை யாட்டுக் காரியம் இல்லை – அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா. ச.சா – கூட்டணி சேந்து ஜெயிச்சுட்டு, விளையாட்டா பேசு றதும் தப்புதானே…? * * * தனி மனிதர்களோ, கட்சியில் உள்ள சிலரோ தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்து விட முடியாது – தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். ச.சா – அப்புறம் ஏன் ராகுல் காந்தி துதி பாடுறீங்க…?? * * * மாநிலங்கள் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடத் தேவை யான உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை – பாஜக குற்றச்சாட்டு. ச.சா – உண்மைதான்… ஆனா உ.ங்க ஆட்சி இருக்குற மாநிலங்களோ தீவிரவாதத்துக்கு ஆதரவா தேவையான உதவிகள செய்யுதே… * * * முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் – மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா. ச.சா – தேர்தல் முடிஞ்சபிறகு இதப்பத்தி பேசுவீங் களா…??

Leave A Reply

%d bloggers like this: