ஏதென்ஸ், பிப்.20 – அரசின் தொடர் சிக்கன நடவடிக்கைகளைக் கண் டித்து நாடாளுமன்றத்தின் முன்பாகக் கூடி ஆயிரக் கணக்கான கிரீஸ் மாணவர் கள் ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளனர். பல்வேறு வகையான மக்கள் விரோத நடவடிக் கைகளைத் தொடர்ந்து கல் வித்துறைக்கான நிதி ஒதுக் கீட்டிலும் கிரீஸ் ஆட்சியா ளர்கள் கை வைத்துள்ளனர். இதற்கும், பொதுவான ஊதிய மற்றும் ஓய்வூதிய வெட்டுகளையும் கண்டித்தே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட் டங்களை ஒடுக்கும் நோக் கத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறாத வகையில் மாணவர்களைத் தள்ளி விடுவதில் அவர்கள் குறியாக இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களோடு, மற்ற பகுதியினரும் சேர்ந்து பங் கேற்றனர். எங்கள் அனை வரையும் இணைத்ததற்கு நன்றி என்று கூறும் அட் டைகளைத் தாங்கிப் பிடித்த வாறு ஆர்ப்பாட்டக்காரர் கள் பங்கேற்றனர். கலவரச் சூழலை உருவாக்க வேண் டும் என்கிற காவல்துறை யினரின் முயற்சி பலிக்கவில் லை. அவர்களின் நோக்கத் தைப் புரிந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், போராட்ட நோக்கத்தை முன்வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். சர்வதேசக் கடன் நிறு வனங்களின் இரண்டாவது தவணையை வாங்கும் நோக் கத்தில் புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஓய்வூதியத்தில் 1,955 கோடி ரூபாய் வெட் டும், குறைந்தபட்ச ஊதியத் தில் 4 ஆயிரத்து 880 கோடி ரூபாயும் வெட்டு செய்யப் போகிறார்கள். இது ஒட்டு மொத்த உழைப்பாளி வர்க் கத்தை போர்க்கோலம் பூணச் செய்திருக்கிறது. அதோடு, கல்விக்கட்டண உயர்வு மற்றும் நிதி வெட்டு போன்றவை மாணவர் களின் போராட்டங்களை அதிகரித்ததோடு, அனைத் துப் பிரிவினரும் இணைந்து போராடுவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. 2011 ஆம் ஆண்டுத் துவக் கத்திலிருந்து அரசின் மக் கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராகப் போராட் டம் நடந்து வருகிறது. ஏராளமான போராட்டக் காரர்கள் காவல்துறை யினரின் அடக்குமுறை நட வடிக்கைகளால் காய மடைந்து மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ள னர். இவற்றையும் மீறி மக்க ளின் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. அரசோ, கடன் பெறுவதற்காக எந்த நிபந்த னையையும் ஏற்கத் தயாராகி யுள்ளது. இந்தக் கடன்கள் நெருக்கடியை அதிகரிக் கவே செய்யும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

Leave A Reply