புதுதில்லி, பிப். 20 – நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடும் கிங் பிஷர் நிறுவனத்தின், செயல்பாடு இடையூறு குறித்து, விமானப்போக்கு வரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டு திங்கட்கிழமை சம்மன் அனுப்பியது. தொழிலதிபர் விஜய் மல்லையாவின் இந்த நிறுவனம் மீண்டுவர, நிதி உதவி அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. நிதி நெருக்கடியால் கிங் பிஷர் பல விமானச்சேவைகளை ரத்து செய்துள் ளது. இதற்குரிய விளக்கமளிக்க, அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அகர்வால் உள்பட உயர் அதி காரிகள் செவ்வாய்க்கிழமை இயக்குன ரகம் முன்பாக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மட்டும் 20க்கும் மேற் பட்ட விமான சேவைகளை, இந்நிறு வனம் ரத்து செய்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை 6 பெருநகரப்பகுதிகளில் கிங் பிஷர், 80 விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் பல நூறு பயணிகள் விமான நிலையத்தில் பரி தவித்து நின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஞாயிற்றுக் கிழமை மாலை வரை எத்தனை விமான சேவைகளை ரத்து செய்துள்ளோம் என்ற விவரங்களை கிங் பிஷர் விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்திடம் தரத் தவறியுள் ளது. கிங் பிஷர் நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க அரசு நிதி உதவி செய்யாது என விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். நிறுவனத்திற்கு கடன் அளிக்க வும் தனியார் வங்கிகளை அரசு கூறாது என் றார். கிங் பிஷர் வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய அரசு சமீபத்தில் கைப்பற்றி ஆய்வு செய்தது. கிங் பிஷருக்கு பல நிதி நெருக் கடிகள் உள்ளன.

Leave A Reply

%d bloggers like this: