ஸ்ரீநகர், பிப். 20- ஆசியாவின் மிகப்பெரிய துலீப் மலர்கள் பூங்கா காஷ்மீரில் அமைந்துள்ளது. இந்தப்பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சுற்றுலா சீசனை முன்கொண்டு செல்ல இந்த துலீப் மலர்கள் பூங்கா வெகுவாக உதவுகிறது. இந்த துலீப் மலர்களை வர்த்தக ரீதியில், மலர் விற்பனையாளர்கள் வணிக வாய்ப்பை கைப்பற்றி உள்ளன. காஷ்மீரின், இந்திரா காந்தி துலீப் பூங்கா ஆண்டுதோறும் மார்ச் மாதம் மலர்கிறது. துலீப் மலர்களை முன்கூட்டியே விளைவித்து அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற முனைப்பு உள்ள, தொழில் முனைவோர் முயற்சியால், பூக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே பூத்தது என, தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் நாளையொட்டி துலீப் மலர்கள் வர்த்தக ரீதியாக வெட்டப்பட்டன. நவீன தொழில்நுட்பத்தால் துலீப் மலர்களை கடுமையான குளிர்காலத்தில் விளைவிக்க முடியும். முன்னர், துலீப் மலர்கள் ஹாலந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. நாட்டில் உள்ள அனைத்து தேவையாளர்களுக்கும் துலீப் மலர்களை தரும் வகையில், உற்பத்தியை பெருக்க திட்டமிட்டு உள்ளதாக துலீப் பூங்கா பொறுப்பாளர் ஜாவீத் அகமது தெரிவித்தார். இந்த துலீப் மலர்கள் தில்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூர் நகரங்களுக்கு அனுப்பப் படுகின்றன. துலீப் மலர்களை உற்பத் திச் செய்யும் தனியார் உற்பத்தியாளர் கள் மிகச் சிறிய அளவிலேயே உள்ளனர். துலீப் மலர்கள், விற்பனைப்போட்டியால் ரோஜா மலர்கள் சிவப்பு நிறத்தைப் பெறலாம் என அவர் தெரிவித்தார். துலீப் மலர்கள் விற்பனையில் அதிக லாபம் கிடைப்பதால் காஷ்மீர் விவசாயிகள் அதனை விளைவிப்பதில், தற்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு துலீப் மலர் வெட்ட ரூ.22 செலவு ஆகும். ஆனால் ரூ.35க்கு விற்பனை ஆகிறது. 200 சதுர மீட்டரில் 30 ஆயிரம் மலர்களை விளைவிக்க முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.3.4 லட்சத்தை விவசாயிகள் பெறலாம். துலீப் மலர்களை விளைவிக்க காஷ் மீரின் வெப்பநிலை, தண்ணீர், நிலம் ஆகியவை மிகச்சிறப்பாக உள்ளன.

Leave A Reply

%d bloggers like this: